districts

img

தருமபுரியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

தருமபுரி, டிச.19- தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தனர். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் மாவட்ட நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயல் பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமி நாதன், நிர்மல்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு கள் குறித்தும், அந்த வழக்குகளின் விசா ரணை நிலை குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந் தனர். மேலும், நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வழக்குகள் குறித்தும் கேட்ட றிந்தனர். இதேபோல், மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க வேண்டிய வழக்குகள் தொடர் பாகவும், விசாரணையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வழக் குகள் தொடர்பான விவரங்களை தெரிவித்த னர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணி கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித் தும் அப்போது ஆய்வு நடத்தப்பட்டது. வழக் குகள் தொடர்பான விசாரணையை காலதாம தம் இல்லாமல் விரைவாக முடிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறை யும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வின்போது நீதிபதிகள் அறி வுறுத்தினர். முன்னதாக, இந்த ஆய்வின்போது தரும புரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மக ளிர் நீதிமன்ற நீதிபதி சையத்பர்கத்துல்லா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, தலைமை குற்றவியல் நீதிபதி கணேசன், மாவட்ட வன  அலுவலர் அப்பலநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.