districts

img

மானாமதுரையில் வாழ்வியல் கண்காட்சி

சிவகங்கை, ஜன.7-  சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சமூகநீதி பேரவை சார்பாக அமைதியை நோக்கி வாழ்வியல் கண்  காட்சி நடைபெற்றது.  இக்கண்காட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன் ,மாவட்ட செயற்  குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி ,தமுஎகச மாவட்ட பொருளாளர் பாலமுருகன்,  மானாமதுரை நகர் மன்ற  தலைவர் மாரியப்பன் கென்னடி,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன்,ஒவெசெ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ,மண்பாண்ட தொழிலா ளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் லட்சுமணன், மானா மதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணா துரை ,ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி இயக்குனர் டாக்டர்  சதக்கத்துல்லா ,சாத்தணி ஊராட்சி தலைவர் சிராஜுதீன்,  ராஜகம்பீரம் ஊராட்சி மன்றத்தலைவர் முசீப்ரஹ்மான், அறிவொளி மோகனசுந்தரம், திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி ,ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் தலை வர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சி யில் விடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்கிற கருத்தி யலும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தண்டியப்பன் கூறினார்.