பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட அதிகாரி உறுதி
போராட்டத்தின் நடுவே மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு உள் ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அப்போது தேனி வட்டாட்சியர் ,பெரியகுளம் கோட்டாட்சியர் ஆகியோர் விசாரணை செய்து அறிக்கை அளித்துள்ளனர். இரண்டு தினங்களில் பஞ்சமி நிலத்தை அனுபவித்து வருபவர்களுக்கு முறையாக தாக்கீது அனுப்பி விசாரணை மேற்கொண்டு, பத்திரப்பதிவை ரத்து செய்து உரிய நபர்களி டம் நிலம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார். அத னைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சார்பாக போராட்டக் களத்திற்கு தேனி வட்டாட்சியர் சரவண பாபு வந்து வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தேனி, நவ.23- தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்க வேண்டும் .இந்த விவகாரத்தில் மாற்று சமூ கத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கிய வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி.செல்லக் கண்ணு வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்டம்,தேனி தாலுகா வீரபாண்டி கிராமம், சர்வே எண் 2021, 953 ஆகிய பஞ்சமி நிலங்களில் சட்டத் திற்கு புறம்பாக மாற்று சமூ கத்தினர் பயன்பாட்டில் உள் ளது. வீரபாண்டி கிராமம் 914/4,பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி பிட் -1 கிரா மம் சர்வே எண் 432,433 ஆகிய பஞ்சமி நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலங்களில் மாற்று சமூகத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து உரி யவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தொடர்பு டைய வருவாய்த்துறை, பத் திரப்பதிவுத்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி தேனியில் தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஒருங் கிணைப்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற் றது. ரத்து செய்க! அமைப்பின் மாவட்டச் செயலாளர் இ.தர்மர் தலை மையில் நடைபெற்ற போராட் டத்தில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் டி.செல் லக்கண்ணு பேசுகையில், தேனி மாவட்டத்தில் ஏராள மான பஞ்சமி நிலங்கள் மாற்று சமூகத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.அதற்கு பத்திரப்பதிவுத்துறையும், வருவாய்த் துறையும் துணைபோயுள்ளன.
மாவட் டத்தில் உள்ள பஞ்சமி நிலங் களை கணக்கெடுத்து ,பட்டா கொடுத்திருந்தால் அவற்றை முறையாக ரத்து செய்து உரிய குடும்பத்திடம் ஒப்ப டைக்க வேண்டும். சட்ட விரோத முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போராட்டத்திற்கு மாவட் டத் தலைவர் டி.கே.சீனி வாசன், மாவட்ட பொருளா ளர் பி . கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏவி. அண்ணாமலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன்,சி முருகன், சிஐடியு தேனி மாவட்ட செய லாளர் எம் .ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி .கண்ணன், மாதர் சங்க மாவட்ட தலை வர் எஸ்.மீனா ,துணை தலை வர் சு. வெண்மணி ,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி . முனீஸ்வரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு,இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல் பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி, தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட தலைவர் அலெக்ஸ், ஆதித் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ராமசாமி பயனாளி கள் உள்ளிட்ட 500 பேர் கலந்து கொண்டனர்.