districts

img

கேரள சட்டப்பேரவை டிச. 5இல் கூடுகிறது

திருவனந்தபுரம், டிச. 1 - கேரள சட்டப்பேரவையின் 7ஆவது கூட்டத்தொடர் டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இக்கூட்டத் தொடர் முற்றிலும் சட்டம் உருவாக்கல் நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படு கிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒரு மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப் பட்டது. அதில், குழுவின் ஆய்வு, ஆதாரங் கள் சேகரிப்பு போன்றவை நடந்து வரு கிறது என்றார். ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்களுக்கு ஆளுநர் கையொப் பமிட வேண்டும். இந்த அமர்வில் பரி சீலிக்கப்படும் மசோதாக்கள் ஆலோச னைக் குழுவின் பரிந்துரையின் பேரில் முடிவு செய்யப்படும். முதல் இரண்டு நாட்களில் பரிசீலிக்கப்படும் மசோதாக்க ளை முடிவு செய்யும் அதிகாரம் சபாநாய கருக்கு உள்ளது. அரசிடம் இருந்து முன்னுரிமை பட்டியல் கிடைத்தவுடன் முடிவு செய்யப்படும். கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமா னர்கள். அவர்கள் தேர்வு செய்த பிரதிநிதிக ளால் கொண்டுவரப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அனைவரது கடமையாகும். அதை ஆளுநர் செய்வார் என நம்புவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார் ஜனவரி 9இல் புத்தகத் திருவிழா ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ மற்றும் கேரள சட்டசபை நூலகத்தின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக முடிவு செய்யப்பட்ட சர்வதேச புத்தகத் திருவிழா ஜனவரி 9 முதல் 15 வரை நடை பெறும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலாச்சார ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர். புத்தகத் திருவிழா மற்றும் சாகித்திய விழா தொடர் பான செய்திகள் மற்றும் பகுப்பாய்வுகளை சிறப்பாக வெளியிடும் அச்சு, காட்சி, ஒலி  மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் சிறந்த  நிருபர், புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப் பதிவாளர் ஆகியோருக்கு ஊடக விருது கள் நிறுவப்பட்டுள்ளன. சட்டப்பேரவை இணையதளத்தில் விவரங்கள் உள்ளன.

;