சென்னை, செப்.14 வாட்டர் `ஹீட்டர் உற்பத்தி துறையில் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனம், வாட்டர் ``ஹீட்டர் தொழில் துறையில் முன்னணி நிறு வனமாகும். இந்நிறுவனம் தனது 60-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு, புதிதாக இன்ஸ்டன்ட் அண்ட் ஸ்டோ ரேஜ் வாட்டர் ``ஹீட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக வெளி நாடுகளுக்கு வாட்டர் ``ஹீட்டர்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ஃபேன் மற்றும் சிறிய ரக மின்சாதனங்கள் தயாரிப்பிலும் இறங்கி யுள்ளது. வாட்டர் ``ஹீட்டர் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நுகர்வோர்கள் பெரும்பாலும் நீடித்து உழைக்கும், துருப் பிடிக்காத மற்றும் கடின நீரை தாக்குப் பிடிக்கும் திறன் கொண்ட ``ஹீட்டர்களை விரும்புவது தெரியவந்துள்ளது. இதை அறிந்து வீனஸ் நிறுவனம் இதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையிலான வாட்டர் ``ஹீட்டர் மாடல் களைத் தயாரித்து தற்போது அறிமுகம் செய்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் 4 புதிய மாடல்களை – 2 ஸ்டோரேஜ் ரக மாடலையும், 2 இன்ஸ்டன்ட் வாட்டர் ``ஹீட்டர் ரக மாடலையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஸ்டீம் அயர்ன், மைக்ரோ ஓவன் பிரிவிலும் வீனஸ் நிறுவனம் கால்பதித்துள்ளது.