districts

img

பொதுப்போக்குவரத்தைப் பலப்படுத்த வலியுறுத்தல் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்;பொதுப் போக்குவரத்தைப் பலப்படுத்துவோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மதுரையில் ஞாயிறன்று இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் தீக்கதிர் மதுரை அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் பரவையைச் சேர்ந்த எஸ்.விநோத்குமார் எட்டுக் கி.மீ.மாரத்தான் போட்டியில் நிச்சயிக்கப்பட்ட இடத்திற்கு 23 நிமிடங்கள் 37 விநாடிகளில் வந்து சேர்ந்து ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசைப் பெற்றார். இதே போல் மதுரை பழங்காநத்தம் புதுயுக தேகப் பயிற்சி சாலையின் டிரஸ்டிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான 98 வயது நிரம்பிய வி.கே.பழனியும் பங்கேற்றுச் சாதனை படைத்தார்.

மாரத்தான் ஓட்டத்தை மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி  வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதுரை மாநகர் மேயர் இந்திராணி, துணை  மேயர் டி.நாகராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்வில் பேசிய மதுக்கூர் இராமலிங்கம், “ தமிழக அரசு நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. மக்கள் பணியாற்றி வருகிறது. அதே போல அரசுப் பேருந்துகளும் அரசுப்  பேருந்துகளாக நிற்காமல் ஓட வேண்டும்.  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 20-க்கும்  மேற்பட்ட இடங்களில் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் (சிஐடியு) மாரத்தான் போட்டிகளை நடத்தியுள்ளது. “ அரசுப் பேருந்துகள் “அரசுப்பேருந்துகளாக” தொடர்ந்து இயங்கவேண்டுமென்ற செய்தி யை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார்.

சாதனையாளர்கள் விவரம்
எட்டு கி.மீ,. மாரத்தான்: (பெண்கள்): டி.லதா (முதலிடம்), டி.பரமேஸ்வரி (இரண்டாமிடம்), சுதா (மூன்றாடமிடம்).
ஆண்கள்: எஸ்.விநோத்குமார் (முதலிடம்), எஸ்.பாலசுப்பிரமணின் (தூத்துக் குடி) (இரண்டாமிடம்), எஸ்.ஸ்ரீஹரி (பாலக் காடு) (மூன்றாடமிடம்).
ஐந்து கி.மீ., மாரத்தான்: (பெண்கள்): பி.கே.கனிஷ்கா (ஒசிபிம் பள்ளி) (முதலிடம்), கே.சந்தியா (சோழவந்தான்) (இரண்டாமிடம்), கே.கலையரசி (சோழவந்தான்) (மூன்றாமிடம்)
ஆண்கள்: ஆர்.தயாசாகர் (மதுரை சத்திரப்பட்டி அரசுப்பள்ளி), (முதலிடம்), எம்.ஷேக்பரீத் (மதுரை எஸ்டிஏடி பள்ளி), (இரண்டாமிடம்), டி.தங்கராஜ் ((மதுரை எஸ்டிஏடி பள்ளி), (இரண்டாமிடம்),
சிறப்புச் சாதனையாளர்: வி.கே.பழனி, பழங்காநத்தம், மதுரை. மாரத்தான் போட்டியில் 98 வயதில் கலந்துகொண்டு எட்டு கி.மீ, பயண இலக்கை நொடி கூட ஓய்வின்றி ஓடிக் கடந்தவர்.
முதல் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ. 8,000, ரூ.5,000-ம் இரண்டாம் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000-ம்  வழங்கப்பட்டது. நான்கு முதல் பத்து இடங்க ளைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.1000, ரூ.500 ரொக்கப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மற்றும்  விருதுநகர் செந்திக்குமாரநாடார் கலைக் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி  ஞாயிறன்று நடைபெற்றது. செந்திக்குமார நாடார் கல்லூரி நுழைவு வாயிலில் பெண்  களுக்கான போட்டியை விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனும், ஆண்களுக் கான போட்டியை போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளர் சிவலிங்கம் தொடங்கி வைத்தார். பெண்களுக்கான பிரிவில் முதலிடத்தை ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த எஸ்.டான்யா, இரண்டாவது இடத்தை டி.அர்ச்சனா, மூன்றாவது இடத்தை  டி.ஆதிலட்சுமி, நான்காவது இடத்தைப் பி. ஸ்ரீவர்ஷினி, ஐந்தாம் இடத்தைப் பி.குருதீபா ஆகியோர் பெற்றனர். ஆண்கள் பிரிவில் முதலிடத்தைத் தள வாய்புரத்தைச் சேர்ந்த வீ.தீபன்குமார், இரண்டாவது இடத்தைச் சாத்தூரைச் சேர்ந்த  கே.வேல்முருகன், மூன்றாவது இடத்தைச் சிவகாசியைச் சேர்ந்த எம்.ஜோதிமுருகன், நான்காவது இடத்தை விருதுநகரைச் சேர்ந்த  செல்வரத்தினம், ஐந்தாம் இடத்தை வது இடத்தை ஜி.என்.பட்டியைச் சேர்ந்த அழகு ராஜ் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக  ரூ.5ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3ஆயி ரம், மூன்றாவது பரிசாக ரூ.2ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ.1000 மற்றும் ஐந்து  முதல் பத்து இடங்களைப் பிடித்தவர் களுக்குத் தலா ரூ.500- பரிசாக வழங்கப்  பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குக் கல்லுரிச் செயலாளர் எம்.டி.சர்ப்பராஜன், நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன், சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட விளை யாட்டு அலுவலர் எஸ்.குமரமணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன், கல்லூரியின் தன்னாட்சி ஒருங்கி ணைப்பாளர் பழனியப்பன், சிஐடியு மாவட்ட  உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்விற்குச் சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.என்.தேவா தலைமை வகித்தார். போக்குவரத்துப் பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை வரவேற்றார்.கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டி.முருகேசன், கல்லூரி துணைப் பேராசிரியர் கே.செல்  வக்குமார், தமுஎகச தலைவர் தேனி வசந்தன், சிஐடியு மண்டலத் தலைவர் ஏ.சுந்தர்  ராஜ், பொருளாளர் எம்.கார்மேகம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத் உட்படப் பலர் பங்கேற்றனர்.
தேனி
தேனியில் போக்குவரத்துப் பணிமனை முன்பு, கடும் பனி பொலிவிற்கிடையே ஆயி ரக்கணக்கான மாணவ -மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.பாலபாரதி துவக்கி வைத்தார். ஆண்கள்,பெண்கள் இருபிரிவாக நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாவது பரிசாக ரூ 3000,  மூன்றாவது பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. நான்கு முதல் 10 இடங்களைப் பிடித்த வர்களுக்கு ரூ.750 ரொக்கம் பரிசளிக்கப் பட்டது. பெண்கள் பிரிவில் முதலிடம் வடுகபட்டி யைச் சேர்ந்த ஆர்.பாண்டீஸ், இரண்டாமிடம் பி.சுகிதா, மூன்றாமிடம் டி.தீபிகா, ஆண்கள் பிரிவில் முதலிடத்தை லோயர் கேப் அரசுப் பள்ளி மாணவன் ஜி.வைரபாரதி, இரண்டா மிடம் முத்துத்தேவன்பட்டி அபினேஷ், மூன்றா மிடம் சின்னமனூரை சேர்ந்த ஷரூன் குமார் ஆகியோர் பிடித்தனர்.
ஆறு வயதில் அபாரம்
தேனி அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில்  எல்.கே.ஜி பயிலும் ஆறு வயது மாணவர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஆறு  கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வியப்பில் ஆழ்த்தினார். அந்தச் சிறுவனுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்குத் திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் ஜி.டி.என் சாலையில் உள்ள மாவட்ட தடகள சங்க அலுவலகம் முன்பு துவங்கிய மாரத்தான் போட்டிக்கு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் (சிஐடியு) சங்க திண்டுக்கல் மண்டல தலை வர் ஐ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் போட்டியைத் துவக்கி வைத்தார். போட்டி ஏழு கி.மீ. ஐந்து கி.மீ., என இரு பிரிவுகளாக நடைபெற்றது. வெற்றி  பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி-கல்லூரி மாணவிகளில் முதல்  இடத்தை தட்டிச்சென்ற மாணவி ஜே.ஜோன்  சாலினிக்கு ரொக்கப்பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் இடத்தைப் பிடித்த டி.நேகா வுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடத்தைப் பிடித்த ஏ.மெல்வினாவிற்கு ரூ.2 ஆயிரம்,  நான்கு முதல் 11 இடங்களைப் பிடித்த டி. துளசி, பிரியதர்ஷினி, எஸ். ஸ்டெபினா, எம்.எஸ்.அபிநயா, தீபாதர்சினி, பி.காவிய தர்சினி, என்.ஸ்வாதி, கே.நேத்ராலட்சுமி ஆகி யோருக்கு தலா ரூ.500- வழங்கப்பட்டது. வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  பள்ளி-கல்லூரி மாணவர்களில் முதல் இடத்தைப் பிடித்த ஜி.டி.என். கலைக்கல்லூரி மாணவர் ஜே;.பொன்னுவெள்ளைக்கு ரூ.5  ஆயிரம், இரண்டாம் இடத்தைப் பிடித்த எஸ். அஜய்தர்மாவுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றா மிடத்தைப் பிடித்த எஸ்.கபிலனுக்கு ரூ.2 ஆயிரம், நான்கு முதல் 11 இடங்களைப் பிடித்த  டி.துளசி, எம்.ஜெய்ஆகாஷ், ஏ.சாமுவேல் செல்வராஜ், ஆர்.ஆகாஷ், ஜி.மூர்த்தி, எம். விவேகானந்தா, வி.கிஷோர், எஸ்.லோகேஷ்வரன், ஆகியோருக்கு தலா ரூ.500-ம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த 11 மாணவிகளில் ஏழு மாணவிகள் அவர் லேடி பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாரத்தானை சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி துவக்கி வைத்தார். நிகழ்விற்கு  மத்திய சங்கத்தின் தலைவர் ராஜன் தலைமை  வகித்தார். காரைக்குடி வட்டாட்சியர் தங்க மணி, டாக்டர் அருள்தாஸ், அழகப்பா பல்க லைக்கழகம் உடற்கல்வி இயக்குநர் முரளி ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சேது ராமன், மாவட்டத் துணைச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைத் தலை வர் அழகர்சாமி, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக சம்மேளன பொதுச்செயலா ளர் தெய்வீரபாண்டியன், தியாகராஜன் ஆகி யோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

;