districts

மதுரை முக்கிய செய்திகள்

லாரி-கார் மோதி  பெண் போலீஸ் பலி

சின்னாளப்பட்டி, ஏப்.12- திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி யைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரு டைய மனைவி சுகந்தி (வயது 27). இவர் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் தங்களது காரில் திண்டு கல்லை அடுத்த வக்கம்பட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சதீஷ்குமார் ஓட்டியுள்ளார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலை யில் ஏ.பி.நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுகந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். சதீஷ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நத்தம் அருகே விபத்து: கூலி தொழிலாளி பலி

நத்தம், ஏப், 12 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய் கருப்பு கோவில் பகுதியை சேர்ந்தவர் சோலை(40). கூலித்தொழி லாளி. இவர் நத்தத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். எர்ரமநாயக் கன்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்த போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவர் ஒட்டி வந்த வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம டைந்த சோலை சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூரில் 60 மூடை ரேசன் அரிசி பறிமுதல் 

தேனி,ஏப்.12- தேனி மாவட்டம் கூடலூர் தண்ணீர் தொட்டி தெருவிலுள்ள பிரகாஷ் என்ப வரது வீட்டில், கேரளாவுக்கு கடத்துவ தற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்ப தாக கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சைப்  பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து ஆய்வாளர் தலைமை யில் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 50 கிலோ எடைகொண்ட 60 சிப்பங்களில் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார், உத்தமபாளையம் ஏஎஸ்பி  ஸ்ரேயா குப்தாவுக்கு தகவல்கொடுத்த னர். அவரது உத்தரவின்பேரில் ரேசன் அரிசியையும், அரிசியை பதுக்கி வைத்தி ருந்த பிரகாஷையும் சுலூர் போலீசார், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.12-  சிவகங்கை மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மிக்கேல் அம்மாள், ஒன்றிய தலைவர் ராமானுஜம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட தலை வர் முத்துக்குமார் ,ஒன்றிய துணைத் தலை வர் பாண்டிமாதேவி ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவ கங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை யிலும்  இளையான்குடியில் மாவட்ட துணை தலைவர் சேதுராமன், ஒன்றிய தலைவர் பூதேவி ஆகியோர் தலைமையிலும்  மானா மதுரையில் மாவட்ட இணைச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் துரைசாமி  தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்புவனத்தில் மாவட்ட இணைச் செயலாளர் பாண்டி, ஒன்றிய தலைவர் பாண்டி ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் மாவட்ட பொருளாளர் அலமேலுமங்கை, ஒன்றிய தலைவர் லதா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரியில் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியம்,  ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலும் எஸ் புதூர் ஊராட்சி ஒன்றி யத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கால, ஒன்றிய செயலாளர் மலைச்சாமி ஆகியோர் தலைமையிலும், தேவகோட்டையில் மாவட்ட துணைத்தலைவர் ரெஜினா, ஒன்றிய துணைத் தலைவர் பாண்டிமா தேவி தலைமையிலும் கல்லலில் மாவட்ட இணைச் செயலாளர் தமிழரசி, ஒன்றிய தலைவர் லல்லி ஆகியோர் தலைமையிலும் கண் ணங்குடியில் ஒன்றிய தலைவர் அன்ன பூரணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.428 வழங்க சிஐடியு வலியுறுத்தல்

சாத்தூர், ஏப்.12- சாத்தூர் நகராட்சியில் துப்புரவுத் தொழி லாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறி வித்த தினக் கூலியான ரூ.428 ஐ வழங்க வேண்டுமென சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையா ளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நக ராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 86 துப்பு ரவு தொழிலாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். இவர்களுக்கு நாள்தோறும் ரூ.428 வீதம் கூலியாக வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். ஆனால், இந்த உத்தரவை சாத்தூர் நகராட்சியில் நீண்ட காலமாக அம லாக்கவில்லை. மாறாக மாத ஊதியமாக ரூ. 4 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் என வழங்கப் பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்த ரவை அமல்படுத்த வேண்டுமென சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சார்பில் செவ்வாயன்று நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதில், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன், சிபிஎம்  மாவட்டக்குழு உறுப்பினர் கே.விஜய குமார், நகர் செயலாளர் பி.பெத்தராஜ், ஏ. சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க கோரிக்கை.

பழனி, ஏப்.12- தமிழக அரசு குரூப்-1 முதல் நிலை  தேர்வில் வெற்றி பெற்று மெயின் தேர் வுக்கு தகுதியாகும் நபர்களுக்கு 2013-14ம்  ஆண்டு முதல் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்தஉதவித்தொகை தாட்கோ மூலம் வழங்கபட்டுவருகிறது.ஒரு மாணவர் 3 முறை உதவித் தொகை  பெற தகுதியானவர். கடந்த 2019 ம்  ஆண்டு குரூப்1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவித் தொகை இதுவரை வழங்க படாமல் உள்ளதாக மாணவர்கள்புகார் தெரி விக்கின்றனர். இந்த தொகையானது குரூப்-1 முதன்மை தேர்வுக்கு தேவை யான புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வாங்க பேருதவியாக உள்ளது. ஆனால் குரூப்1 மெயின் தேர்வே முடிந்துவிட்ட நிலையில் இதுவரை தொகை வழங்கப்படவில்லை. எனவே மேலும் காலம்தாழ்த்தாமல் முதல் நிலை தேர்வில் வென்ற எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவ, மாணவிகள் உரிய காலத் தில் பயன்பெறும் வகையில் உதவித் தொகை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் இந்த உதவி தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்த அரசு பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்றும் ஆயக் குடி மரத்தடி மையம் வலியுறுத்தி யுள்ளது. 

தொழில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி: ஆட்சியர்

தேனி, ஏப்.12- முதலமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து நிதி உதவி வழங்கும் திட்டத் தின் கீழ் மிகவும் வறிய நிலையில் உள்ள தொழில் கல்வி பயிலும் ஏழை மாணவ/ மாணவியர்களுக்கு அவர்களின் படிப்பினைத் தொடர மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ரூ50  ஆயிரம் வழங்கப்படுகிறது.  மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மாணவ/ மாணவியர்கள் அரசின்  ஒற்றைச் சாளர முறையின் வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் நிதி உதவித்தொகை பெற இயலாது. தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ .72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுள்ள மாணாக்கர்கள் உடனடி யாக மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் அலு வலகம், தேனி என்ற முகவரிக்கு உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்/ தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தரச் சான்று, குடும்ப தலைவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 72, 000- க்கு மிகா மல் உள்ள சான்று இணைக்க வேண்டும். ஒற்றை சாளர முறையில் வழியாக சேர்க்கை பெற்றமைக்கான சான்று, இருப்பிடச் சான்று,தொழிற் நுட்ப கல்லூரியில் பயின்று வருவதற்கான சான்று (ஆகியவைகள் விண்ணப்பத்து டன் இணைக்க வேண்டும். இந்த தகுதி அரசு ஒற்றைச் சாளர முறைவழியாக தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாண விகளுக்கு மட்டுமே பொருந்தும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கண்ணகி கோவிலுக்குச் செல்லும் வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு

தேனி, ஏப்.12-  கண்ணகி கோவிவில் சித்ராபவுர்ணமி விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை வரை குமுளியில், கேரள  போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவி லுக்குச் செல்லும் வாகனங்களின் ஆவ ணங்களை சரிபார்க்கின்றனர்.  ஏப்ரல் 16ஆம் தேதி வரும் சித்திரைப் பவுர்ணமி திருவிழாவை கண்ணகி கோவிலில் பக்தர்கள் கொண்டாட இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  கண்ணகி கோவிலுக்கு குமுளி வனப்பகுதி வழியாக ஜீப் வாகனத்தில் மட்டுமே செல்ல முடி யும். அதனால் கோவிலுக்குச் செல்லும் முன்பே, வாகனங்களின் தகுதி, ஆர்சி புக், இன்சூ ரன்ஸ் போன்ற ஆவணங்களை கேரள போக்கு வரத்து துறை அதிகாரிகள் சரிபார்ப்பது வழக்கம். திருவிழா அன்று குமுளியில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், அன்று  வாகனங்களை சோதனை செய்து அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படும் எனபதால், இரண்டு நாட்களுக்கு முன்பே வாகனசோதனை செய்து அனுமதி அட்டை வழங்குவர். இந்நிலை யில் வரும் சனிக்கிழமை நடைபெறும் சித்திரா பவுர்ணமி விழாவுக்கு கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் வாகனங்களுக்கு வெள் ளிக்கிழமை வரை கேரள போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி அட்டை வழங்குகின்றனர்.  குமுளியிலிருந்து பக்தர்கள் கண்ணகி கோவி லுக்குச் செல்ல ஜீப் கட்டணம் நபர் ஒன்றுக்கு 140 ரூபாய் என்றும், திரும்ப வர ரூ 140 கட்ட ணம் என்றும், தனியாக வாகனம் பிடித்துச் சென்றால் ரூ. 3500 என்றும் கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.