districts

மதுரை முக்கிய செய்திகள்

தோழர் ராமு காலமானார்

சின்னாளப்பட்டி, மார்ச் 24-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப் பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக செயல்பட்ட தோழர் ராமு (65) அவர்கள் காலமானார்.   சிஐடியு-சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சின்னாளபட்டி கிளை தலை வராக செயல்பட்ட இவர்,  சிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.   அன்னாரது மறைவுச்செய்தியறிந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், ஆட்டோ சங்க மாவட்டத் தலை வர் ஆர்.பால்ராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் பிரபாகரன், ஆத்தூர் ஒன்றிய சிஐடியு கன்வீனர் வி.கே.முருகன், சுமைப் பணிச் சங்க மாவட்டச் செயலாளர் பிச்சை  முத்து, தீக்கதிர் நிருபர் ம.ஹரிஹரன் மற்றும் தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

340 கிலோ கஞ்சாவை  கடத்திய 4 பேர் கைது 

மதுரை, மார்ச் 24- மதுரை திருமங்கலம் அருகே கரடிக் கல் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் வியாழனன்று காவல்துறையினர் சோதனை மேற் கொண்டு வந்தனர். இந்நிலையில், கப்ப லூர் சுங்கச்சாவடி அருகே டாடா சுமோ வாகனத்தை சோதனை செய்ததில், 4 பேர் கொண்ட கும்பல் 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால், தனிப்படை காவல்துறையினர் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரை யும் கைது செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த தெய்வம், உசிலம் பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், ரமேஷ் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேந்தி ரன் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப் படை காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

பிளாஸ்டிக் தயாரிப்பு இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

விருதுநகர், மார்ச் 24- விருதுநகர் அருகே ஆர்.எஸ்.நகரில் தனியார் பிளாஸ்டிக் ஆலையில் உள்ள இயந்திரத்தில் சிக்கி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரி ழந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் நாரா யணபாண்டே (27). இவர் குடும்ப சூழ் நிலை காரணமாக விருதுநகர் ஆர்.எஸ்.  நகரில் உள்ள பிளாஸ்டிக் நிறவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல  பிளாஸ்டிக் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது இயந்தி ரத்தில் சத்தம் வந்தது. உடனே சூப்பர் வைசர்கள் சக்தி சுகுமாறன், திரவியம் ஆகியோர் நாராயணபாண்டேவை அழைத்து கோளாறை சரி செய்யுமாறு கூறியுள்ளனர்.  அப்போது அவர் இயந்திரத்தை சரி செய்ய முயன்ற போது, அதில் சிக்கி அவர் படுகாயமடைந்தார். உடனே ஊழியர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாராயண பாண்டே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து வில்லிபத்திரி கிராம நிர்வாக அதிகாரி சக்திமுருகன் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பிளாஸ்டிக் கம்  பெனி சூப்பர் வைசர்கள் சக்திசுகு மாறன், திரவியம் ஆகியோர் மீது விருது நகர் கிழக்கு காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

பழனி வையாபுரி குளத்தில் பாலம் அமைத்திடுக! நகர்மன்ற துணைத் தலைவர்  கே.கந்தசாமி முதல்வருக்கு மனு

பழனி, மார்ச் 24-  பழனி வையாபுரி குளத்தில் மேற்கு  பகுதி மக்கள் பயன்படுத்தும்  பாதையை திறந்திட நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும் பழனி நகர்மன்ற துணைத் தலைவருமான கே.கந்தசாமி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறி யுள்ளதாவது: பழனி நகரில் வையாபுரி குளம் உள்ளது. இதில் பேருந்து நிலையம் எதிரில் மேற்கு பகுதி மக்கள் மற்றும் மாரியம்மான் கோவில் செல்லும் மக்கள் இந்த பாதையை பயன் படுத்தி வருகின்றனர். மேலும், காந்தி சாலை  கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. பொதுப்பணித் துறை சாலையில் பெரும் பள்ளம் தோண்டியுள்ளது.  எனவே, எந்தவிதமான ஆக்கிரமிப்பு இல்லாமல் குளத்து சாலையை உடனடியாக திறக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் நிரந்தரத் தீர்வு ஏற் படுத்திட குளத்து நீருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் அமைத்திட நடவடிக்கை எடுத்திடவும் அதுவரையில் பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்திட திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இம்மனு கூட்டுறவு துறை அமைச் சர், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோ ருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த வாயிற்கூட்டம்-பிரச்சாரம் 

திருவில்லிபுத்தூர், மார்ச் 24- பொது வேலைநிறுத்தத்தை விளக்கி திருவில்லிபுத்தூர் வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாக வாயில் முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஆர்.கணேசன் (சிஐ டியு), கே.சண்முகநாதன் (தொமுச) ஆகி யோர் தலைமை தாங்கினர். கே.உயிர் காத்தான் (சிஐடியு), வி.மோகன் (தொமுச) ஆகியோர் விளக்கிப் பேசினர்.  சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இராஜபாளையம் மொத்த கூட்டு றவு பண்டகசாலையில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இதற்கு கிளை தலைவர் எஸ்.செல் லச்சாமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஆர்.முனியாண்டி, மாவட் டச் செயலாளர் கே.உயிர்காத்தான், சிஐ டியு மாவட்ட உதவித் தலைவர் ஜி.கணே சன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  இதில், இராஜபாளையம் மொத்த கூட்டுறவு பண்டகசாலை கிளை நிர்வாகி கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜி.எஸ். சங்கரி, ஆர்.மகேஸ்வரி உட்பட ஊழியர் கள் திரளாக கலந்து கொண்டனர்.

இராமநாதபுரத்தில் பிரச்சாரம்

இராமநாதபுரம், மார்ச் 24- பொது வேலை நிறுத்தத்தை விளக்கி இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிஐ டியு, எல்பிஎஃப், ஏஐடியுசி, எச்எம்எஸ் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி தலைமை வகித்தார். தொமுச மாவட்ட நிர்வாகி வின்சென்ட், அமலதாஸ், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி என்.கே.ராஜன் மற்றும் ஹச்.எம்.எஸ்.குமரகுருபரன் ஆகியோர் விளக்கிப் பேசினர். பிரச்சாரத்தில், தொழிலாளர்களின் 44 சட்டங்களை நான்கு தொகுப்பு களாக மாற்றிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மறுக்கும் மின்சார சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.

அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா: வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

விருதுநகர், மார்ச் 24- அரசு சிப்காட் நிலத்தை சட்ட விரோத மாக தனியாருக்கு  பட்டா மாறுதல் செய்து தந்த வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் சுந்தர மூர்த்தி. இவர்  கடந்த  ஆண்டு தலைமையிடத்து வட்டாட்சிய ராக விருதுநகரில்  பணிபுரிந்துள்ளார். அப்போது  ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள துலுக்கப்பட்டி சிப்காட்டில் உள்ள அரசு நிலத்தை, விதிமுறைகளை மீறி  தனி நபருக்கு பட்டா மாறுதல் செய் துள்ளார். இதுகுத்து புகார் எழுந்தது. இதையடுத்து நடைபெற்ற விசார ணையில் விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. எனவே, வட்டாட்சியர் சுந்தர மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட  ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். 

கண்ணகி கோவில் சித்திரை திருவிழா  பாளையத்தில் முதல்கட்ட ஆலோசனை

தேனி, மார்ச் 24- கூடலூர் அருகே மங்கல தேவி கண்ணகி கோவில் சித்ராபவுர்ணமி திருவிழா ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி  நடைபெறவுள்ளதை தொடர்ந்து உத்தமபாளையத்தில் கோட்டாட்சியர் தலைமையில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கௌசல்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உத்தமபாளை யம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா, மேகமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர்  ரவிக்குமார் மற்றும் வனம், காவல், வரு வாய் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் செயலாளர் ராஜ கணேசன், பொருளாளர் முருகன், சட்ட  ஆலோசகர் ஷியாம், நிர்வாகக் குழுவினர் பஞ்சுராஜா, சரவணன், சபரிநாதன், ஈஸ்வ ரன் மற்றும் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் கோவி லுக்கு சென்று வருவதில் கேரள வனத் துறை மற்றும் அம்மாநில அதிகாரிகளின் கெடுபிடிகள் குறித்து எடுத்துரைத்து, இந்த ஆண்டு திருவிழாவில் அவை களையப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா கூறுகையில், கண்ணகி கோவில் திருவிழாவிற்கான முதல் ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கண்ணகி அறக்கட்டளையினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டது.  அது தொடர்பாக துறை சார்ந்த அலு வலர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக போக்குவரத்து, நடைபாதையில் பக்தர்களுக்கு கேரள வனத் துறையால் ஏற்படுத்தப்படும் கெடுபிடிகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் களைவதற்காக மாவட்ட ஆட்சி யரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். தொடர்ந்து மாவட்ட அளவிலான கண் ணகி கோவில் திருவிழா குறித்த ஆலோ சனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் தலை மையில் மார்ச் 28-ஆம் தேதி திங்களன்று நடைபெறும். அதனை தொடர்ந்து  இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் தலை மையிலான இரு மாநில அதிகாரிகளுட னான ஆலோசனை கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி நடைபெறும் என்றார்.

பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள  2 லட்சம் தொழிலாளர்களை பாதுகாத்திடுக!

அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், மார்ச் 24- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதி மக்க ளின் முக்கிய தொழிலான பட்டா சுத் தொழில் கடும் நெருக்கடி யைச் சந்தித்து வருகிறது. அதை பாதுகாக்க தமிழக அரசு உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறிய தாவது: விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக பட்டாசுத் தொழில் உள்ளது. இதில், மாவட்டத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் மூன்றில் ஒரு பங்கு பேர் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், பட்டாசு உற் பத்தி மற்றும் வெடிப்பது, விற் பனை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சரவெடி தயார் செய்யக்கூடாது. பேரியம் நைட் ரேட் எனும் வேதிப்பொருளை பட்டாசு உற்பத்திக்கு பயன்  படுத்தக் கூடாது என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கு உச்சநீதிமன் றத்தில் விசாரணையில் இருக்கி றது. தற்போது வெடிபொருள் கட்டுப்பாட்டுதுறை அதிகாரி களும், வருவாய்துறை அதிகாரி களும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் கடும்  நெருக்கடியை தந்து வருகின்ற னர். மேலும், அபராதம் என்ற பெயரில் அதிக அளவில் முறை கேடும் நடைபெற்று வருகிறது. இந்த நெருக்கடி காரண மாக கடந்த மார்ச் 21 முதல் மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறி வித்து தற்போது ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே, இப் பிரச்சனையில் தாங்கள் உடனடி யாக தலையீடு செய்து ஆலை களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தங்களையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு வழக்கை முடிவுக்கு கொண்டுவர கூடுதலாக தலை யீடு செய்திட வேண்டும். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழி லாளர்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.