districts

24 மணி நேரத்தில் கூடல்நகர் ரயில் நிலைய அடிப்படைப் பணிகள் முடிக்கப்படும் அதிகாரிகள் உத்தரவாதம்: சு.வெங்கடேசன் எம்.பி., தகவல்

மதுரை, பிப்.24- மதுரை கூடல் நகர் ரயில் இரண்டா வது ரயில் நிலையமாக மாற்றுவது, தற்போது பயணிகளுக்கு  அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து மதுரை ரயில்வே முதன்மைக் கோட்டப் பொறியாளர் வில்லியம்ஸ் ஜாய், மாநக ராட்சி  ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடே சன் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டர் ஆய்வுக்கு பின் கூடல் நகர் ரயில் நிலை யத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், “கூடல்நகரில் ரயில் நிலையத்தைப் பொறுத்தமட்டில் பாதி நிலம் பாதி நிலம் ரயில்வேக்கு சொந்தமாகவும் இன்னொரு பாதி மாநகராட்சிக்கு சொந்தமாகவும் உள்ளது எல்லாவற்றையும் சரி செய்வ தற்கான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில் சில வேலைகள் முடிந்துள்ளது இன்னும் சில வேலை முடிக்கப்படாமல் உள்ளது. ஓரிரு நாளில் முடிப்பதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது. குறிப்பாக கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும்  தற்காலிகமாக சாலை கள் அமைக்க வேண்டும். இருக்கும் சாலை களை சீரமைக்க வேண்டுமென்பது உறு திப்படுத்தப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சி தரப்பில் இரண்டு பக்கமும் கூடுதலாக சில மின் விளக்குகள் வசதி செய்ய வேண்டியுள்ளது. அதையும் மிக விரைவில்  செய்து தருவதாக மாநக ராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார்” என்றார்.

;