districts

மதுரை முக்கிய செய்திகள்

மார்ச் 29-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் 

ஒட்டன்சத்திரம், மார்ச் 22-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்து குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மார்ச் 29 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளிமந்தையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மாற்றுத்திற னாளிகள் தங்களது அனைத்து கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

காலமானார் 

மதுரை, மார்ச் 22- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு கட்சி கிளை செயலாளர் கே.கார்த்திக் (45) உடல் நல குறைவால் திங்களன்று காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பி.மணவாளன், பி.எஸ்.இராஜாமணி, என்.வெள்ளைக்கண்ணு, எம்.சுப்பிர மணி, எஸ்.முனியாண்டி, என்.நடராஜன் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி பலி

விருதுநகர், மார்ச் 22- விருதுநகர் அருகே வீட்டில் சமையல் செய்த மூதாட்டியின் சேலையில்  தீப்பற்றியதால்  உயிரிழந்தார். விருதுநகர் அருகே உள்ளது பாண்டியன் நகர். இங்குள்ள தங்கமணி காலனியைச் சேர்ந்த காசிராஜன் மனைவி சுப்புத்தாய் (73). இவர் தனது மகன் ராஜ்குமா ரின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சுப்புத்தாய் சமையல் செய்யும் போது, எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியதாக கூறப்படு கிறது. இதையடுத்து, அவரது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் சுப்புத்தாயை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்புத்தாய் உயி ரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் ஊரக காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஆடுகள் திருட்டு

அருப்புக்கோட்டை, மார்ச் 22- அருப்புக்கோட்டை அருகே வீட்டின் முன்பு கட்டப்பட்டி ருந்த ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அருப்புக்கோட்டை அருகே உள்ளது வதுவார்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் ராமர்(34). இவர் வழக்கம் போல, தான் வளர்த்து வந்த ஆடுகளை வீட்டின் முன்புள்ள தாழ்வாரத்தில் கட்டி விட்டு உறங்கச் சென்றுள்ளார். இரவு 2 மணிக்கு எழுந்து பார்த்த போது ஆடுகளைக் காணவில்லை. இதுகுறித்து பந்தல்குடி காவல் நிலையத்தில் ராமர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

தூக்கிட்டு முதியவர் தற்கொலை

விருதுநகர், மார்ச் 22- விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் அருகே உள்ளது சத்திரரெட்டியபட்டி. இங்குள்ள காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் அழகர் சாமி(68). இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்து வந்த நிலையில், கால் பாதங்களில் காந்தல் ஏற்பட்டதாம். இதனால், தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அழகர்சாமி, தனியார் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அழகர்சாமியின் மகள் பாலச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உயிரிழந்த கோவில் யானைகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம்  ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

மதுரை, மார்ச் 22-   மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா காலங்க ளில் சாமி முன்பு உலா வருவதற்காக கோவில் நிர்வாகம்  சார்பில் அங்கயற்கண்ணி, பார்வதி, அவ்வை ஆகிய மூன்று யானைகள் பராமரிக்கப்பட்டு வந்ததுள்ளன.  இந்த நிலையில், அங்கயற்கண்ணி யானை 2007-ஆம் ஆண்டு உயிரிழந்தது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானை மட்டுமே உள்ள நிலையில் உயிரிழந்த அங்கயற்கண்ணி யானைக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளது  இதே போல் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்த மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவில் யானை அவ்வைக்கும், கோவில் வளாகத்திற்குள் உள்ள பசு மடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்காக திருப்ப ரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சத்து 67 ஆயிரம் 056 ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளது.  மேலும் பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயா வாசகர் வட்டத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

கோவை, மார்ச் 21- கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக் கான இலக்கிய விருதுகள் அறி விக்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் க.மோகன ரங்கனும், புதுமைப்பித்தன் விரு துக்கு எழுத்தாளர் ம.காமத்துரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து விஜயா பதிப்ப கத்தின் மு.வேலாயுதம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, கோவை விஜயா  வாசகர் வட்டம் ஆண்டுதோறும் இலக்கியம், பதிப்புத் துறை ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை விஜயா வாசகர் வட்டம் அறி வித்துள்ளது.  இதன்படி, இந்த ஆண்டு ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தா ளர் க.மோகனரங்கன், ‘கல்லாப் பிழை’ கவிதை தொகுப்புக்காக தேர்வாகியிருக்கிறார். புதுமைப் பித்தன் விருதுக்கு எழுத்தாளர் ம.காமுத்துரை ‘கடசல்’ நாவல் படைப்புக்காகத் தேர்வாகியுள்ளார்.  கவிஞர் மீரா விருதுக்கு கவிஞர் பொன்முகலி ‘ஒருத்தி’ கவிதைக ளுக்கும் ‘இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது’ என்ற கவிதை தொகுப்புக் காக அவர் தேர்வு செய்யப்பட் டுள்ளார். அதேபோல் பதிப்புத் துறைக் கான விருது பிரிவில் சிறந்த நூலக ருக்கான சக்தி வை.கோவிந்தன் விருதுக்கு கோவை மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த புத்தக விற்பனையா ளருக்கான வானதி திருநாவுக்கரசு விருதுக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரஸ்வதி புத்தகக் களஞ்சி யத்தின் வீ.ரவி தேர்வு செய்யப் பட்டுள்ளார். படைப்புகளுக்கான விருதை தேர்வு செய்யும் குழுவில், எழுத்தா ளர்கள் க.வை.பழனிச்சாமி, எம். கோபாலகிருஷ்ணன், ரவிசுப்பிர மணியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து விருதாளர்களை தேர்ந்தெ டுத்தனர்.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் செங்கல் சூளை: ஆட்சியர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச். 22-  மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இயங்கும் செங்கல் சூளை நடத்த தடை விதிக்க கோரிய மனு குறித்து மதுரை  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மேலூர் கூத்தம்பட்டி கிரா மத்திற்கு அருகில் இருக்கக்கூடிய நைனார் ஊரணி பகுதியில் செல்லத்துரை என்பவர் கடந்த 5 ஆண்டு களாக செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார்.   இந்த செங்கல் சூளையை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இதிலிருந்து வெளியேறும் புகையினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் வயதான பெண்கள் கர்ப்பிணி கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  மேலும் முறையான மாசுக்கட்டுப்பாட்டு சான்றும் பெறவில்லை. மேலும் செங்கல் சூளைக்கு அருகில் இருந்து சட்டவிரோதமாக அதிகப்படியான மணல் எடுக்கப்படுகிறது.  இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே ஊருக்குள் அமைந்திருக்கும் செங்கல் சூளையில் இருந்து வரும் புகையிலை கட்டுப்படுத்துவதற்கும் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரி யா கௌரி ஆகியோர் அமர்வில் புதனன்று விசாரணை க்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க  உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.




 

;