districts

img

ஆட்குறைப்பு- தனியார்மயத்தை கைவிடுக!

திண்டுக்கல், நவ.26- ஆட்குறைப்பு மற்றும் தனியார்  மயத்தை கைவிட வேண்டும் என்று  அரசு ஊழியர் சங்க திண்டுக்கல்  மாவட்ட பேரவை வலியுறுத்தி யுள்ளது.  அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை திண்டுக்கல்லில் சனிக் கிழமையன்று நடைபெற்றது.மாவட்டத்தலைவர் எஸ். முபாரக்  அலி தலைமை வகித்தார். மாநி லச்செயலாளர் கோதண்டபாணி துவக்கவுரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் மங்களபாண்டியன் ஆகியோர் பேசினர். மாவட்டச்செயலாளர் விவேகானந்தன், மாவட்டப் பொருளாளர் குப்புசாமி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி நிறைவுரையாற்றினார்.  தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் தனியார் மய  நடவடிக்கைகளை கைவிட வேண்  டும். அரசாணை 152, 139, 115  போன்ற ஆட்குறைப்பு அரசாணை களை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். விடுபட்ட அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். சரண்டர் விடுப்பு சம்பளத்தை வழங்க வேண்டும். என்பன உள்  ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. (நநி)

;