districts

img

மதுரையில்  ப்ரீதா ஹோமியோ மருத்துவமனை நிறுவனர்- மருத்துவர் தே.செங்குட்டுவன்

மதுரையில்  ப்ரீதா ஹோமியோ மருத்துவமனை நிறுவனர்- மருத்துவர் தே.செங்குட்டுவன் - டாக்டர் பி. ப்ரீதா குமாரி ஆகியோரின் மகள் செ. நிலா - செ. ஃபார்ஸி குறள்நெறித் தமிழ் திருமணவிழா ஞாயிறன்று கோர்ட்யார்டு மாரியட் ஹோட்டலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.  தேனி, நாகலாபுரம் வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் ச. ந. இளங்குமரன் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. லாசர்,  மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன்,  மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் என். முத்து அமுதநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.