districts

மதுரை விரைவு செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து தொழிலாளி படுகாயம்

சாத்தூர், மே 24- சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் பட்டாசு  ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் நான்கு அறைகளில் தீப்பற்றியதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையானது, நாக்பூர் உரி மம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.  இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பட்டாசு தயரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திங்களன்று மாலை, தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கருந்திரி தயார் செய்யும் அறையில் உராய்வு ஏற்பட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த சின்னக்காமன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜ்(50) என்ப வர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சக தொழிலாளர்கள் பாண்டியராஜை மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

தேர்வு எழுத சென்ற மாணவி மாயம் 
 

தேனி, மே 24- ஆண்டிபட்டியில் தேர்வு எழுத சென்ற பெண் காணா மல் போனது குறித்து காவல்துறையினர் தேடி வரு கிறார்கள்.   தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அருகில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திங்க ளன்று இறுதி தேர்வுக்கு பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தி லும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.  இதனால் அவரது பெற்றோர் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை கடத்தியவர் கைது 

தேனி, மே 24- கூடலூரில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். தேனி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 8 ஆம் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோர் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த சிறுமியை கண்டுபிடித்து, கடந்த 12 ஆம் தேதி தேனி குழந்தைகள் நல குழுமத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு, சிறுமியை மருத்துவ பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.  சிகிச்சையில் இருந்த சிறுமியை கடந்த 22 ஆம் தேதி கூட லூர் பகுதியை சேர்ந்த ராயர் என்பவரின் மகன் ஹரிஸ்குமார் (20) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் க.விலக்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் போரின் ஹரிஸ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆண்டிபட்டியில் புகையிலை பறிமுதல் 

தேனி, மே 24- ஆண்டிபட்டியில் காவல்துறையினர் கடைகளில் சோதனை நடத்தியதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டி நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிறு கடைகளில் வைத்து விற்பனை செய்வ தாக கிடைத்த தகவலின் பேரில் ஆண்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கோகுலகண்ணன், சவரி யம்மாள் தேவி ஆகியோர் தலைமையில் ரோந்து பணியில்  ஈடுபட்டனர். அப்போது சக்கம்பட்டி பகுதியில் உள்ள கணே சன்(59) என்பவருக்கு சொந்தமான கடையில் நடத்திய சோத னையில் 6,330 ரூபாய் மதிப்பிலான 369 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.  அதேபோல் கடைவீதி பகுதியில் உள்ள அருண்(46) என்பவருக்கு சொந்தமான கடையில் நடத்திய சோதனை யில் 3,870 மதிப்பிலான 330 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கடமலைக்குண்டு, மே 24- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை காவல் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீ சார் செவ்வாய்க்கிழமை காலை காமன்கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாறைக்  குட்டம் என்ற பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டி ருந்த காமன்கல்லூரை சேர்ந்த ஆண்டவர் (வயது 55), கும ணன்தொழுவை சேர்ந்த நடராஜ் (65) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பு டைய குமணன்தொழுவை சேர்ந்த அரவிந்த்குமார் (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வரதட்சணைக்காக எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தேனி, மே 24- கம்பம் அருகே வரதட்சணை கொடுமை  காரணமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்  பட்ட சம்பவத்தில் 2 வயது குழந்தையை  தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்பம் அருகில் உள்ள நாராயணத் தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் (60). இவரது மகன் அருண்பாண்டியன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவப் பிரியா(25) என்பவரை காதலித்து திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாகித்(2) என்ற ஆண்குழந்தை இருந்தது. மகன் காதல்  திருமணம் செய்ததால் தனது மருமகளி டமிருந்து வரதட்சணை கிடைக்க வில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சிவப்பிரியா இல்  லம் தேடி மருத்துவம் திட்டத்தில நர்சாக வேலை பார்த்து வந்தார். வரதட்சணை  கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமி யார் ஒச்சம்மாள் மற்றும் நாத்தனார் கனிமொழி ஆகியோர் தொடர்ந்து கொடு மைப்படுத்தியதால் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு நடந்த சண்டையின் போது ஆத்தி ரமடைந்த பெரியகருப்பன் தனது மரு மகள் மற்றும் பேரன் மீது பெட்ரோல்  ஊற்றி தீ வைத்தார்.பலத்தக் காயங்களு டன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 வயது குழந்தை பரி தாபமாக உயிரிழந்தது. சிகிச்சையில்  இருந்த சிவப்பிரியா மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் வரதட்சணை கொடுமையால் தனது கணவர் குடும்  பத்தினர் எரித்துவிட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது மாம னார் பெரியகருப்பன், கணவர் அருண்  பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தாய் உயிரிழப்பு  கடந்த ஒரு வாரமாக சிகிச்சை யில் இருந்த சிவப்பிரியா செவ்வாய்க் கிழமை காலை பரிதாபமாக உயிரி ழந்தார். இதனை தொடர்ந்து இரட்டை  கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்: தேனி எஸ்.பி தகவல்

தேனி, மே 24- க.மயிலாடும்பாறை அருகே கஞ்சா  வியாபாரி மற்றும் அவரது உறவின ருக்கு சொந்தமான ரூ. 22 லட்சம் பெறு மான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள தாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்  பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் தெரி வித்துள்ளார்.  தேனியில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  தாலுகா குமணந்தொழு பகுதியை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியான கீரிப்பட்டி முருகன் மற்றும் அவரது  உறவினர்களின் 22 லட்ச ரூபாய் மதிப்பி லான அசையும், அசையா சொத்துக்கள் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்ப வங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக் கள் முடக்கப்படும்.  தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்  யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் குண்டர்  தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள் ளார். இந்த ஆண்டில் இதுவரை 66 கஞ்சா  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்  ளது. 123 பேர் கைது செய்யப்பட்டு உள்ள னர். அதில் 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே  போல தேனி மாவட்டத்தில் கொரியர்  மூலம் விற்கப்படும் கஞ்சா விற்பனை யை தடுக்க அவ்வப்போது கொரியர் சர்வீஸ் மையங்களில் மோப்ப நாயின் மூலம் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். தேனி மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா வியாபாரத்தை ஒழிக்க அனைத்து  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள், உறவினர்களின் வங்கி கணக்குகள் குற்றச் செயலில் சம்பந்தப்பட்ட இருப்  பின் முடக்கப்பட்டு வருகிறது. 

கஞ்சா கொள்முதல் செய்த ஆய்வாளர் 

பொய் வழக்கு போடுவதற்கு தேனி  காவல் ஆய்வாளர் கஞ்சா கொள்முதல் செய்த விவகாரம் குறித்து கேள்வி  எழுப்பப்பட்டது .அதற்கு பதிலளித்த எஸ்.பி, இது தொடர்பாக காவலர் ஒரு வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .காவல் ஆய்வாளர் மீதான புகார் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசா ரணை நடத்தி வருகிறார் .அறிக்கையை பெற்ற பின் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் சக்திவேல், ஆண்டி பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்க வலியுறுத்தல்

விருதுநகர், மே 24- ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். குடும்ப பென்சன்  தாரர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும். நிலுவை யில் உள்ள அகவிலைப்படி யை வழங்க வேண்டும். 2020 மே மாதத்திற்கு பின் விருப்ப ஓய்வுபெற்றவர்களின் வாரி சுகளுக்கு பணப் பலன்கள்  வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் முதலாம் ஆண்டு பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டது. விருதுநகர் எம்.ஆர்.வி  நினைவரங்கில் தோழர்கள் எஸ்.மன்னார்சாமி , யு.பிச்சை  நினைவரங்கில் நடைபெற்ற பேரவைக்கு கே.பாண்டிய ராஜ் தலைமையேற்றார். விருதுநகர் மண்டல செய லாளர் எஸ்.தங்கப்பழம் துவக்கவுரையாற்றினார், செயலாளர் போஸ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில  பொதுச்செயலாளர் எம்.அசோகன், மண்டல பொரு ளாளர் முத்துச்சாமி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத்  தலைவராக கே.பாண்டிய ராஜ், செயலாளராக ஆர்.அழ கர்சாமி, பொருளாளராக எம். ராஜகோபால், உதவி நிர்வா கிகளாக வி.ரவிச்சந்திரன், எம்.தர்மராஜ், எஸ்.ராதா கிருஷ்ணன், கே.ராமர் ஆகி யோர் உட்பட 16 பேர் கொண்ட  நிர்வாக குழு தேர்வு செய்யப்  பட்டது.

மருத்துவத்துணி உற்பத்தியாளர்  வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு ஆதரவு

இராஜபாளையம், மே 24- ஒன்றிய மோடி அரசின் வரலாறு காணாத நூல் விலை  உயர்வை கண்டித்து இராஜபாளையம் அருகே சத்தி ரப்பட்டி பகுதியில் மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள் சார்பில் மே 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் நடைபெற  உள்ளது.  இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டக் குழு தன்னு டைய முழு ஆதரவை தெரிவிப்பதாக சங்கத்தின் மாவட்ட  பொதுச் செயலாளர் ஆர். சோமசுந்தரம் அறிக்கையில் தெரி வித்துள்ளார். மேலும் ஏழு நாட்கள் வேலை நிறுத்தம் நடப்பதால் ஒரு நாளைக்கு 30 லட்சம் வீதம் 7 நாளைக்கும் சேர்த்து  இரண்டு கோடியே 10 லட்சம் சம்பள இழப்பு தொழிலா ளர்களுக்கு ஏற்படும். இருந்தாலும் ஒற்றுமையைக் காட்ட  வேண்டும் என்ற நோக்கில் மோடி மோடி அரசுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடப்பதால் தொழிலாளர்கள் அனை வரும் ஒன்றுபட்ட ஆதரவை வழங்குவதோடு உற்பத்தி யாளர்களின் வேலைநிறுத்தத்தில் முழுமையாக கலந்து கொள்கிறார்கள் என்று அறிவித்துள்ளார்.


 

;