districts

img

வருசநாடு பகுதி விவசாயிகளை வெளியேற்றுவதை கைவிட்டு, நிலங்கள் ,குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குக!

தேனி, ஆக.11- வருசநாடு பகுதி விவசாயி களை வெளியேற்றுவதை கை விட்டு, நிலங்கள், குடியிருப்பு களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்  கத்தின் தேனி மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் தேனி மாவட்ட 7 ஆவது  மாநாடு பெரியகுளத்தில் வியாழனன்று மாவட்டத் தலைவர் பி.ஜெயராஜ் தலைமையில் நடை பெற்றது. சங்கக் கொடியை மூத்த  விவசாயி கோடாங்கிபட்டி சண்  முகம் ஏற்றி வைத்தார் .வரவேற் புக்குழு செயலாளர் எம்.வி.முரு கன் பிரதிநிதிகளை வரவேற்று பேசி னார். அஞ்சலி தீர்மானத்தை எஸ்.கே.பாண்டியன் வாசித்தார். மாநாட்டினை சங்கத்தின் மாநிலச்  செயலாளர் சாமி .நடராஜன் தொடங்கி வைத்து உரையாற்றி னார். வேலை அறிக்கையை மாவட்  டச் செயலாளர் டி.கண்ணன் சமர்ப்பித்தார். சிஐடியு தேனி மாவட்டச்  செய லாளர் எம்.ராமச்சந்திரன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு ஆகி யோர் வாழ்த்திப் பேசினர் .புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் 

நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் 

மாநாட்டில் 33 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாவட்டத் தலைவராக எஸ்.கே.பாண்டியன், மாவட்ட செயலா ளராக டி.கண்ணன், மாவட்ட பொரு ளாளராக எஸ்.மணிகண்டன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  துணைத் தலைவர்களாக கே.ராஜப் பன், பி.ஜெயராஜ், இ.பாண்டி, மணிகண்டன் ஆகியோரும், துணைச்  செயலாளர்களாக சு.வெண்மணி, சந்திரன், எம்.வி.முருகன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். அகமலை, போடி வடக்கு மலை, கழுகுமலை ஆகிய பகுதி களில் பன்னெடும் காலமாக விவ சாயம் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆண்டி பட்டி ஒன்றியத்தில் உள்ள குளங்க ளுக்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலம் கிலோ வுக்கு  ரூ.2 ஆயிரம், கரும்பு டன்  னுக்கு ரூ. 4 ஆயிரம் ,தேங்காய் கிலோ வுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்து  அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் விவசாய கல்லூரி, பெரியகுளத்தில் வெற் றிலை ஆராய்ச்சி மையம் ,வேளாண்  விளைபொருட்களை பதப்படுத் தும் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அசாம் வெள்ள நிவாரண நிதி

மாநாட்டில் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பிரதிநிதிகளிடம் வசூலிக் கப்பட்ட  ரூ 3406 ஐ மாநில பொதுச் செயலாளர் பெ .சண்முகத்திடம் மாவட்ட செயலாளர் டி.கண்ணன் வழங்கினார்.

;