districts

img

சுற்றுச்சூழல் தின விழா

சின்னாளப்பட்டி,ஜூன் 13- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் சுற்றுப்புறத் தூய்மை,வீடுகள் தோறும் குப்பைகளை பிரித்து வழங்குதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி களில் உடனுக்குடன் குப்பை மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.  இதில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்ட றிக்கைகள் வழங்கி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தார்,செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலை வகித்தார்,துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் வரவேற்றார், மேலும் இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் முகமதுநசீர், தன்னார்வலர்கள் மாணவர்கள், தூய்மை பணி யாளர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், முடிவில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.