districts

மதுரை முக்கிய செய்திகள்

மாலைக் கடைகளை அகற்றுவதா? சிஐடியு எதிர்ப்பு

சிவகங்கை, மார்ச் 27-  மாலை கடைகளை அகற்றிய மடப்புரம் கோயில் உதவி ஆணையரை கண்டித்தும், அவர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிறு வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பில்  உதவி ஆணையர் அலுவலகம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் தண்டியப்பன், ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, நகரச் செயலாளர் ஈஸ்வரன், பொதுத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் முருகானந்தம், சிறு  வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேங்கையா, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜெய ராமன், திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் நீலமேகம் ஆகியோர் பேசினர். 

25 குடும்பங்களுக்கு பட்டா  வழங்க கோரி சிபிஎம் மனு 

இராமநாதபுரம், மார்ச் 27- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலி நோக்கம் சாத்தார் கோவில் பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  இதுதொடர்பாக சிபிஎம் கிளைச் செயலாளர் வேலம்மாள் அளித்துள்ள மனுவில், ‘‘சுமார் 40 ஆண்டு களாக வாலிநோக்கம் சாத்தார் கோவில் பகுதியில் குடி யிருந்து வரும் 25 குடும்பத்தினருக்கு ஏற்கனவே பீமா  ரசீது வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ரசீது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகத்தினர் இக்குடும்பங்களை காலி செய்ய கூறுகின்றனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் விளையாட்டு காரணமா?  மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

தூத்துக்குடி, மார்ச் 27 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரை சேர்ந்த சுசிகரன்-வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் (வயது 13) . சுசிகரன் பெட்டிக்கடை வைத்துள்ளார். குகன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு  படித்து வந்துள்ளார். குகன் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார். வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்கா மல் செல்போனில் கேம் விளையாடி வந்ததாகக் கூறப்படு கிறது.  ஞாயிறன்று 2 செல்போன்களிலும் நெட் இணைப்பு தீர்ந்ததால் விளையாட முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி  ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமி

தேனி, மார்ச் 27- மிரட்டல் விடும் துணை காவல் கண்கா ணிப்பாளர்   மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  14 வயது சிறுமி ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனிச்செட்டிபட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது பெண். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது சகோதரர் கலசிங்கத்துடன் தனது பெரியப்பா வேல்ராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது பெரியப்பா வேல்ராஜ் சொத்து பிரச்சனை தொடர்பாக ஆலோசனை வழங்கியதில் அதே ஊரைச்  சேர்ந்த சிவகுமார் மற்றும் அவர்களது உற வினர்களான வடிவேல், உள்ளிட்ட 10 க்கு  மேற்பட்டோர் மீது முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்கு சென்ற சிறுமி மற்றும் அவரது சகோதரர் கலசிங்கத்தை  வழிமறித்த உறவினர்  சிவக்குமார் உள்ளிட்ட 18 நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சிறுமியின் பெரியம்மா தனலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனிச்செட்டிபட்டி காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார்.அதன்பின்னர் எதிர்  தரப்பினருக்கு ஆதரவாக பழனிச் செட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ்  உள்ளிட்ட காவலர்கள் சிறுமி வீட்டிற்கு வந்து சிறுமியின் தந்தை சிவக்குமாரை தாக்கி உள்ளனர். காவல்துறையினர் தாக்கி யது குறித்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில்  சிறுமியின் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட காவல்துறையினர் சிறுமியின் வீட்டிற்கு சென்று அடித்து  கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன் மீதும் தன் குடும்பத்தி னர் மீதும் தாக்குதல்  நடத்தியவர்கள் மீது   நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமி திங்க ளன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார் இதனைக் கண்ட காவலர்கள் உடனடியாக சிறுமியை  மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக சிறுமி யை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குமரியில் ஒரு வாரத்தில்  22 பேருக்கு கொரோனா

நாகர்கோவில், மார்ச் 27 குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோ னா பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலையில் தற்பொழுது மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோ னாவை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 9ஒன்றியங் களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.  நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாகர்கோவில் நகரில்  4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில் திங்களன்று மேலும் 3 பேர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குருந்தன் கோடு, ராஜக்க மங்கலம் ஒன்றியத்தில் தலா ஒருவரும் தக்கலை ஒன்றியத்தில் இரண்டு பேரும் திங்களன்று பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். சனிக்கிழமை  7 பேர் பாதிக்கப் பட்ட நிலையில் திங்கட்கிழமை மேலும் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலா னோர் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

முருகன் கோவிலுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்துவதா? காவிக்கும்பலை கைது செய்க! 

திண்டுக்கல், மார்ச் 27- பழனி திரு ஆவினன்குடி முருகன் கோவிலுக்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய காவிக்கும்பலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் பழனி நகரச்செயலாளர் கே.கந்தசாமி முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படைவீரான பழனி திரு ஆவினன்குடி கோவிலில் சங்பரிவார் அமைப்பினர் கோவிலில் வர்ணம் பூசவில்லை என்று கூறி முருகன் சன்னிதானத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எந்த ஒரு அமைப்பும் சாதாரண கோரிக்கைக்காக கோவிலுக்குள் சென்று தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் வழக்கம் இல்லை. ஆனால், சங்பரிவார் அமைப்பினர் திங்களன்று காலை 11 மணிக்கு ஆவினன்குடி முருகன் சன்னிதானத்திற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் கூறிய போது, கோவில் நிர்வாக அலுவலரிடம் கூறுங்கள் என்று கூறினார். சட்டமன்ற பேரவை கூட்டம் நடைபெறுகிற போது, இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் கோவிலுக்குள் நடத்துவது தவறு என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தினோம்.  ஆனால், பழனி நகர ஆய்வாளர் இது தொடர்பாக சங்பரிவார அமைப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அவரது இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்புடைய செயல் அல்ல;  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்காக கொடி கட்டிய போது, பழனி நகரத்தின் அழகு கெட்டுவிட்டது என்று கூறி எங்கள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்தார்.  மேலும் பாதவிநாயகர் கோவில் தேவஸ்தான அலுவலகம் முன்பெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி அளித்து வருகிறது.  இந்த நிலையில் ஆவினன்குடி முருகன் கோவில் சன்னிதானத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய சங்பரிவார கும்பல் மீது வழக்கு பதியாமல் இருப்பது அவர்களை மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு சங் பரிவார் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். (நநி)

சாலை விபத்தில் பெண் பலி

மதுரை, மார்ச் 27- மதுரை பாலமேடு அருகே உள்ள தெத்தூர் மேட்டுப் பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி லெட்சுமி (45). இவர்  திங்களன்று காலை சொந்த ஊரிலி ருந்து மதுரை பழங்காநத்தத்திற்கு உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். தீக்கதிர் அலுவ லகம் அருகே உள்ள ஆலமரம் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் லெட்சுமி சம்பவ இடத்திலேய பலியானார். மற்றொரு சம்பவம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (25). இவர் இரு சக்கர  வாகனத்தில் பாசிங்காபுரம் பகுதியில் இருந்து குமாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ரெங்கராஜபுரம் அருகே  வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி ஜெயசூர்யா ஓட்டி  வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ  இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தண்ணீர் கேட்டு மறியல்

மதுரை, மார்ச் 27- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஆரிய பட்டி ஏ.கண்ணியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  ஏ.கண்ணியம்பட்டி கிராமத்திற்கு கடந்த இரண்டு மாதங்க ளாகக் குடிநீர் வரவில்லை எனக்கூறி கிராம மக்கள் திங்க ளன்று உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பயன்பாட்டிற்கு வந்த நிலக்கோட்டையில் கண்காணிப்புக் கேமிராக்கள்

சின்னாளபட்டி, மார்ச் 27- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத் துள்ள பள்ளபட்டியில் கால்நடை மருத்துவமனை, கூட்டு றவு பண்டகசாலை, மதுரை பிரதான சாலை உட்பட மக்கள் அதிகம் வந்து செல்லும் தேவர்நகர் பகுதியில் சமூக விரோதச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமி ராக்கள் பொருத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திமுக ஒன்றியக் கவுன்சிலர் லலிதா தனது  செலவில் முக்கியச் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துக் கொடுத்தார். இந்தக் கேமிராக்கள் திங்களன்று மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன் கேமிராக்களை இயக்கி வைத்தார். நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய், ஒன்றியத் துணைச் செயலாளர்  வெள்ளிமலை, நெடுமாறன்,  திமுக நிர்வாகிகள் தியாகு,  பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாத்துரையில் மருத்துவ முகாம்

சின்னாளபட்டி, மார்ச் 27-  திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை கிராமத்தில் இயங்கி வரும் பெல்லா  பிரிமியர் ஹேப்பி ஹைஜின் கேர்  தனியார் நிறுவனம் மற்றும் திண்டுக்கல் ஆர்.வி அறக்கட்  டளை இணைந்து திங்களன்று இலவச பொது மருத்துவ முகாம் நடத்தியது. மதுரை அகர்வால் கண் மருத்துவமனை, திண்டுக்கல்  மேயோரிஸ் பல் மருத்துவமனை மற்றும் மதுரை  தேவ தாஸ் பன்னோக்கு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கி னர். முகாமில் தொப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பையா, அம்பாத்துரை . காவல் ஆய்வாளர் வெங்கி டாசலம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் ஆத்தூர் நிலைய அலுவலர் லெட்சுமணன் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மார்ச் 31 எரிவாயு நுகர்வோர்  குறைதீர் கூட்டம் 

இராமநாதபுரம், மார்ச் 27- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்  பான எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களு டன் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 31 அன்று நடை பெறவுள்ளது. கூட்டத்தில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வ ரம், கீழக்கரை, இராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகா விற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

தொழிலாளி பலி

தேனி, மார்ச் 27- திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின்   துணை இயக்குநர் அலுவலகம் தேனி கே.ஆர்.ஆர் நகர்  பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் விரிவாக்கத்திற்கான கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  அப்போது நுழைவுவாயில் மேற்கூரை சரிந்து விபத்தா னது. இதில் மாரிமுத்து (37) மற்றும் அசோக் (25) என இரு வர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனில்லாமல் பெரியகுளம் பங்களாபட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயிரிழந்தார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது  மத்திய கண்காணிப்பு குழு தலைவர் தகவல்

தேனி, மார்ச் 27- முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ள தாக ஆய்வுக்கு பின் மத்திய  கண்காணிப்பு குழு தலை வர் விஜயசரண் தெரிவித் துள்ளார். உச்சநீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட மத்திய கண்கா ணிப்பு குழுவின் தலைவர்  மத்திய நீர்வள ஆணைய  தலைமை பொறியாளர் விஜ யசரண் தலைமையிலான குழுவினர் திங்களன்று முல்  லைப் பெரியாறு அணையில்  ஆய்வு செய்தனர். இக்குழுவினர் தேக்கடி யில் இருந்து வல்லக்கடவு வனப்பாதை வழியாக வாக னத்தில்  பெரியாறு அணைக்கு  சென்றனர். அங்கு மெயின் அணை, கேலரி பகுதி, பேபி  பேபி அணை பகுதிகளை ஆய்வு செய்த பின்பு அணை யின் கசிவுநீர் அளவையும் ஆய்வு செய்தனர். பின்னர் மதகுகளில் இயக்கத்தை சோதனை செய்தனர்.  அணையில் ஆய்வு செய்த பின் படகு மூலமாக  தேக்கடிக்கு வந்த கண்கா ணிப்பு குழு தலைவர் விஜய் சரண், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறு கையில், ‘‘முல்லைப் பெரி யாறு அணையில் ஆய்வு பணிகள் நிறைவடைந்தன. முதன்முதலாக முல்லைப் பெரியாறு அணையை பார் வையிட்டு குழுவினருடன் ஆய்வு செய்துள்ளேன். ஆய்வு முடித்து தற்போது ஆலோ சனை கூட்டத்திற்காக சென்று கொண்டிருக்கிறோம். முல்லை பெரியாறு அணை தற்போது பாது காப்பாக உள்ளது. அணை யின் அனைத்து பிரச்சனை கள் குறித்து தீர்வு காண நட வடிக்கை எடுக்கப்படும். முல்லைப்பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதை ஆய்விற்கு உட்படுத் தப்பட்டது. பேபி அணையை பலப்  படுத்துவது உள்ளிட்ட அணை  தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும தீர்வு  காண கூட்டத்தில் ஆலோ சித்து  நடவடிக்கை எடுக்கப்  படும்’’ எனத் தெரிவித்தார்.





 

;