districts

img

தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், திருவில்லிபுத்தூரில் மின் ஊழியர்கள் -பொறியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தேனி, ஆக.8- மின்சார சட்ட திருத்த மசோதா மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மின்வாரிய ஊழி யர்கள் -பொறியாளர்கள் சங்க கூட்டுக் குழு  சார்பில் தேனி, சிவகங்கை, இராமநாத புரத்தில்   மின் ஊழியர்கள் -பொறியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மேற்பார்வைப் பொறியாளர் அலு வலகத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்  வாரிய ஊழியர்கள்,பொறியாளர்கள் பங் கேற்ற   போராட்டத்திற்கு தொமுச. பேரவை மாவட்டச் செயலாளர் திருமுருகன் தலைமை  வகித்தார்.போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சம்  மேளன மாவட்ட செயலாளர்  எம்.ராமச்சந்தி ரன்,  பொறியாளர் கழக செயலாளர் சண் முகா, பொறியாளர் சங்கச் செயலாளர் முத்துராமலிங்கம், பொறியாளர் யூனியன் செயலாளர் முருகானந்தம், எம்ப்ளாயீஸ் பெடரேசன் சங்க மாவட்டச் செயலாளர் மூக்கையா, ஐக்கிய தொழிலாளர் சங்க செயலாளர் சீனிவாசன் ,கணக்காயர் கள தொழிலாளர் சங்க தலைவர் ரமேஷ் உள்  ளிட்டோர் பேசினர். மாவட்டத்தில் 47 மின்வாரிய அலுவல கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இச்சட்டத்தின் மூலம் மின்  கட்டணம், விநியோகம் தனியார் மூலம்  செயல்படுத்தப்படும். இதனால் விவசாயி கள், ஏழைகள் அதிகளவில் பாதிக்கப்படு வர் என்றும் .புதன்கிழமை முதல்  போராட்  டம் தீவிரப்படுத்தப்படும் என்று மின்வாரிய தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ள னர்.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 30 மின்  வாரிய அலுவலகங்கள் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்களும் ஊழியர்களும் பொறியாளர்களும் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..சிவ கங்கையில் மின் ஊழியர் மத்திய அமைப்  பின் (சிஐடியு) மாவட்ட செயலாளர் கருணா நிதி மாநில செயலாளர் உமாநாத், தொமுச மாவட்டச் செயலாளர் முருகேசன், ஐஎன்டி யுசி மாவட்டசெயலாளர் சண்முகபாண்டி யன், ஐடிஐ சங்க பொறுப்பாளர் செல்வ குமார், அதிமுக மாவட்ட தலைவர், பெட ரேஷன் சங்க மாவட்ட தலைவர் சுப்பிர மணி, இன்ஜினியரிங் சங்க மாவட்டத் தலை வர் ராமன், பொறியாளர் சங்கத்தின் மாநில  பொறுப்பாளர் கோகுலவர்மன், பொறியா ளர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்ற னர். சிவகங்கை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில்   சிஐடியு,  எல்பிஎப், உள்ளிட்ட அனைத்து சங்க தொழி லாளர் மற்றும் பொறியாளர்கள் சார்பாக 915 பேர் உள்ளிருப்பு    போராட்டத்தில்   ஈடு பட்டனர்.

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூரில் வலையபட்டி துணைமின் நிலையத்தில் ஊழியர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம்  ஈடுபட்டனர். சிஐடியு கோட்ட செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். திரு வில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய தோடு சிஐடியு கோட்டதலைவர் ராமசாமி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்  ஏஐடியுசி பெடரேஷன் கோட்டத் தலைவர் கண்ணன், தொமுச சார்பில் கோட்டத் தலை வர் ஆறுமுகம், செயலாளர் ஜெயசிங் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்  டனர். கோட்டைப் பட்டியில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .அலுவலகத்தில் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளி ருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட் டத்தை நடத்தினர்.
 


 

;