districts

img

வீடுகளில் மோட்டார் வைத்து எடுப்பதால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருவில்லிபுத்தூர், மே 31- 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக திருவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.  வீடுகளில் மோட்டார்  வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் விநியோகம் பாதிக்கப்படு வதாக நகராட்சித் தலைவர் பதிலளித்தார்.  திருவில்லிபுத்தூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் செவ்வா யன்று நகராட்சித் தலைவர் ரவிகண்ணன் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் செல்வமணி, ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.   கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: திமுக கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன்,  ராஜா மான்சிங், சுரேஷ் ஆகியோர் பேசுகையில், ‘ நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. அதுவும் முறையாக வழங்கப்படாததால் 20 நாட்கள்  வரை சேமித்து வைக்கப்படும் குடிநீரில் புழுக்கள் உருவாகி  நோய் தொற்று பரவும் சூழல் நிலவுகிறது. குடிநீர் விநியோ கத்தை முறைப்படுத்தி வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.  நகராட்சி தலைவர் பதிலளிக்கையில், வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் விநியோ கம் பாதிக்கப்படுகிறது.

பிரச்சனைகளை சரி செய்து அனைத்து  பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  சிவகுமார்(தி.மு.க ) பேசுகையில், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் தனியாக  செல்வ தற்கு மக்கள் அச்சப்படுகின்றனர் என்றார். சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் பதிலளிக்கையில்,  சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  துணைத்தலைவர் செல்வமணி கூறுகையில்,  நகராட்சி பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.  பள்ளிகள் திறக்கும் முன் நகராட்சி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;