districts

img

திருமோகூர் தாக்குதலை கண்டித்து ஜூன் 12 இல் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 6-  தாக்குதலில் காயம டைந்து  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச் சையில் உள்ள திருக் குமார், பழனிக்குமார், செல்வக் குமார், மணிமுத்து ஆகிய 4 பேரையும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவள வன் நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறு கையில், மதுரை திருமோகூ ரில் கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்  வில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து ஆடிய போது அதனைக் கண்டித்த தலித் இளைஞர்களை தாக்  கியுள்ளனர், நள்ளிரவில்  உறங்கிக் கொண்டிருந்த போது தலித் குடியிருப்புக் குள்  50க்கும் மேற்பட்டோர் சென்று தாக்குதல் நடத்தி யுள்ளனர், இதில் 4 பேர் காய மடைந்துள்ளனர், பைக்கு கள், கார் போன்றவை சேதப்படுத்தப்பட்டுள்ளன., மதுரையை சுற்றி பல்வேறு பகுதிகளில் சாதிய வன் கொடுமை அதிகரித்து வரு கிறது. இதனை தடுக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண் டும். மதுரை புறநகர் பகுதி களில் நடைபெற்ற வன் கொடுமை நிகழ்வுகளில் காவல்துறையினர் வழக்குப்  பதிவு செய்வதில் தயங்கு கின்றனர். இது தலித் மக்க ளுக்கு காவல்துறையினர் செய்த அநீதி ஆகும், காவல்  துறையினர் பாதிக்கப்பட்ட வர்கள் மீது பொய் வழக்கு புனைவதை தடுக்க வேண் டும். திருமோகூர் சம்ப வத்தை கண்டித்து மதுரை யில் வரும் 12 ஆம் தேதி  ஆர்ப்பாட்டம் நடைபெறவுள் ளது என்று தெரிவித்தார்.

;