பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வினை கட்டுபடுத்த கோரியும், மோட்டார் வாகன சட்டத் திருத்தை திரும்ப பெற கோரியும், மதுரை மாவட்ட ஆட்டோ- சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மேலூர் தாலுகாத் தலைவர் எஸ்.பி.மணவாளன் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் ஆகியோர் பேசினர் .சிபிஎம் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் ஆதரித்துப் பேசினார்.