பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ள சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில், பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் எஸ்.முத்துக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.