கொல்லம், ஜன.18- ஆர்.எஸ்.பி.யில் இருந்து மொத்தமாக தலைவர் கள் வெளியேறினர். அவர் கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தனர். ஆர்எஸ்பி மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஸ்ரீதரன் பிள்ளை, மாவட்டக் குழு உறுப்பினர் டி.பிரசாந்த், ஆர்.ஒய்.எப். தலைவர்கள் ஆர்.பிரதீப், ஆர்.ஸ்ரீராஜ் ஆகியோர் செவ்வாயன்று அக்கட்சியி லிருந்து ராஜிநாமா செய்தனர். சிபிஎம் உடன் இணைந்து செயல்படுவதாக அறவித்துள்ள அவர்க ளை கொல்லம் போளயத்தோடு என்எஸ் நினைவி டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுதேவன் சிவப்பு மாலை அணிவித்து வரவேற்றார். யு.டி.எப்-பின் கைப்பாவையாக ஆர்.எஸ்.பி, அதன் தனித்துவத்தை இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர், ஆர்எஸ்பியின் அரசியல் நிலைப் பாடு பொருத்தமற்றதாகிவிட்டது எனவும், கட்சியில் உள்ள விசயங்கள் தனிப்படட நபர்களை மையமாகக் கொண்டவை என்றும் ஆர்.ஸ்ரீதரன்பிள்ளையும் தலைவர்களும் கூறினர். யுடியுசி மாநிலத் துணைத் தலைவரும், மோட்டார் தொழிலாளர் நல நிதி வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன் பிள்ளை, ஆர்எஸ்பி முன்னாள் மாவட்டச் செயலாளரும், மாவட் டத்தின் முக்கியத் தலைவருமாவார். திருக்கடவூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமாவார் டி.பிரசாந்த், ஆர்.ஒய்.எப் குண்டரா மண்டலக் குழு உறுப்பினர் ஆர்.பிரதீப், ஆர் ஸ்ரீராஜ் பிஎஸ்யு (பி) கொல்லம் மாவட்ட தலைவராக இருந்தார் .