தூத்துக்குடி, ஜூன் 27 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஓட்டப்பிடாரம் ஒன்றிய 17 ஆவது மாநாடு புதியம்புத்தூர் சுடலைமணி நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் கே.மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை கணபதி ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.மாரியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாநாட்டை துவக்கிவைத்து விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் பேசினார். மாநாட்டில் மாவட்டத் தலைவர் ஆர்.ராகவன், மாவட்டச் செயலாளர் பா. புவிராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் த.சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய ஒன்றியத் தலைவ ராக கே.மாரியப்பன், செயலாளராக செல்வ ராஜ்,பொருளாளராக வேல்முருகன், துணைத் தலைவர்களாக ராஜ கனி, கெங்கு சாமி, துணைச் செயலாளர்களாக மொட்டை சாமி, தீனாகுமாரி உள்ளிட்ட 21 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப் பட்டது. 60 வயது நிறைவடைந்த விவசாயிக ளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொம் பாடி ஓடையின் குறுக்கே அணை கட்டி ஓட்டப்பிடாரம், பெரியகுளம் புதியம்புத்தூர் மலர்க்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.