மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையில் ”மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ரத்தினவேல் வரவேற்று பேசினார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது.