districts

img

தெருச்சாலைகளை உடனே சீரமைத்திடுக!

மதுரை, நவ.29-  மதுரை மாநகராட்சி பகுதிகளில்   தெரு சாலைகள் மிகவும் சிதிலம டைந்துள்ளன. அவற்றை சீரமைக்க உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னி யம்மாள் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சி 13 ஆவது  கூட்டம் மேயர்  இந்திராணி, ஆணையா ளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை  மேயர் தி. நாகராஜன் ஆகியோர் தலை மையில் செவ்வாயன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் 100 வார்டுகளில்  பொது சுகாதாரப் பணியை மேற் கொள்ள ஒப்பந்த அடிப்படையில் நிர்ண யம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான வேலை உத்தரவுக்கான காலத்தை நீட்டிப்பது, மதுரை மாநகராட்சியில் உள்ள 96  பள்ளிகளுக்கு 120 தூய்மைப்   பணியாளர்கள் ரூ. 391 ரூபாய் ஊதி யத்தில் 89 நாட்கள் நிபந்தனைப்படி தூய்மை பணிக்கு அமர்த்துவது. இதில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ஊதி யம் வழங்குவது. மதுரை தமுக்கம் மைதானம் சீர்மிகு மதுரை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங் கத்தை வாடகைக்கு விடுவது என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு முன் வைக்கப் பட்டது. 

அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

12 கூட்டத் தொடர்களிலும் பேசப் பட்ட எந்த தீர்மானமும் இதுவரை நிறை வேற்றப்படவில்லை என்று கூறி அதி முக மாமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.  பூமிநாதன் பேசுகையில், தெற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநக ராட்சி வார்டுகளில் மாநகராட்சி பணியா ளர்கள் குறைவாக உள்ளனர்.  இதனால் பணிகள் பாதிக்கப்படுகிறது. மழைக் காலம் துவங்கி விட்டது. எனவே சாலை களை உடனடியாக சீரமைக்க வேண் டும் என்றார். 

செல்லூர் கண்மாயில்  மண் சரிவை தடுத்திடுக!

மண்டலம் - 2 தலைவர் சரவணன் புவ னேஸ்வரி பேசுகையில், செல்லூர், குல மங்கலம் சாலைகள் போடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் செல்லூர் கண்மாய் கரை பகுதி யில் மழைக் காலங்களில் மணல் சரிவு ஏற்பட்டு அவை சாலைக்கு வருவதால் சாலைகள் மோசமாகின்றது .எனவே  மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித் துறை நிர்வாகத்திடம் பேசி செல்லூர்  கண்மாய் கரையினை சுற்றி உள்ள பகு திகளில் மண் சரிவை தடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார். 

நகை பட்டறை குடிசை தொழிலுக்கு வரியை குறைத்திடுக!

மண்டலம் 4 தலைவர் முகேஷ் சர்மா  பேசுகையில், பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு இடையே குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. பல  இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து  வருவது அல்லது பாதாள சாக்கடை பணிகள் செய்யும்போது குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே அதை சீரமைப்பதற்கு உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 47 வது வார்டு எழுத்தாணிக்  கார தெருவில் உள்ள நகை பட்டறை தொழிலாளிகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் வைத்து குடிசை தொழில் என்ற அடிப்படையில் மின் இணைப்புகள் பெற்று பணிகள்  செய்து வருகிறார்கள். தற்போது மாநக ராட்சி நிர்வாகம் அவர்களுக்கு வரி  உயர்வை அதிகரித்துள்ளது எனவே  குடிசைத் தொழில் என்ற அடிப்படை யில் அதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரி குறைப்பு செய்திட வேண்டும் என்று கூறினார்.

மாநகராட்சி பள்ளி தொழிலாளர்களுக்கு  ரூ.721 ஊதியம் வழங்கிடுக! 

71 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் வி.முனியாண்டி (வி.சி.க) பேசு கையில், மாடக்குளம் பகுதியை ஒட்டி யுள்ள ஆதிதிராவிடர் மயானத்தில்  போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாநக ராட்சி தொழிலாளர்களுக்கு அநீதியை  இழைக்கும் அரசாணை 152 ஐ ரத்து செய்திட வேண்டும். மாநகராட்சி பள்ளி களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு அரசாணைப்படி தினசரி ஊதி யம் ரூ 721 ஊதியமாக வழங்க வேண் டும்.ஆனால் அதற்கு மாறாக 120 தான் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி அவர்கள் பணி யாற்ற முடியும். எனவே அரசு நிர்ண யித்த ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று கூறினார்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடுக!

56 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் பேசுகையில், கடந்த மாமன்ற கூட்டத் தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலை யத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றோம். அதேபோல் மதுரை கோட்ஸ் மேம்பாலம்  சீரமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம் ஆனால் பணிகள் முழுமையாக இன் னும் முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய மற்றும் தெரு சாலைகள் மிக வும் சிதிலமடைந்துள்ளது. அவற்றை சீர மைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாநகராட்சி பகுதி களில் மாடுகள் மற்றும் தெரு நாய்க ளின் தொல்லை அதிகரித்துள்ளது .அவற்றை கட்டுப்படுத்த உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்டல வாரியாக ஜாக்கிங் லாரிகள்,  ஜேசிபி இயந்திரம், டீசல் ஆட்டோக்கள், சூப்பர் செக்சன் வாகனங்கள் என்பதை மாநகராட்சி சார்பில் வாங்கிக் கொடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தர வுப்படி 339 மாநகராட்சி தொழிலாளர் களை நிரந்தரம் செய்திட வேண்டும்.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் என்பதை வழங்கிட வேண்டும்.  தமிழக அரசு  கொண்டு வந்த தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய அரசாணை 152 வது  சரத்தை வாபஸ் வாங்க வேண்டும்.  மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத்  திருவிழாவையொட்டி நடைபெறு கின்ற பொருட்காட்சி தமுக்கம் மைதா னத்தில் நடைபெறுவதற்கு மாநக ராட்சி நிர்வாகம் ஏற்பாடு உண்டா ?  மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என்று பேசினார்.

 

;