districts

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரையில் சிபிஎம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அறிமுகக் கூட்டம் திமுக மதுரை மாநகர் குழு சார்பில் பசுமலையில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கோ.தளபதி, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில தணிக்கை குழு உறுப்பினர் வி.வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்து ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழனியில் சிபிஎம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பழனியில் செவ்வாயன்று திமுக நகரச் செயலாளர் வேலுமணி, ஒன்றியச் செயலாளர் சௌந்திரபாண்டி, காங்கிரஸ் நகரச் செயலாளர் முத்து விஜயன், வணிகச் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜே.பி.சரவணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரினார். நிகழ்வில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வ.ராஜமாணிக்கம், நகர்மன்றத் துணைத்தலைவர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

வேட்புமனுத் தாக்கல் இன்று  துவங்குகிறது

சென்னை, மார்ச் 19 - தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று ஒரே கட்ட மாக நடைபெற உள்ளது.  

இந்நிலையில், தேர்த லில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (மார்ச் 20) அன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது.  வேட்புமனுத்தாக்கல் மார்ச் 27-ஆம் தேதி முடிவடை கிறது. வேட்பு மனு மீதான பரி சீலனை மார்ச் 28 அன்று நடைபெறுகிறது. மனுக் களைத் திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும்.