districts

கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தைக் திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் முற்றுகை

திண்டுக்கல், ஜூன் 9- கூட்டுறவு சிக்கன நாண யத்தைக் கண்டித்து திண்டுக் கல் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பற்றிய விவரம் வரு மாறு.   திண்டுக்கல் மாநகராட்சி யில் துப்புரவு தொழிலா ளராக பணியாற்றுபவர்க ளுக்கு கடன் தருவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் ஓய்.எம்.ஆர்.பட்டி யில் செயல்படுகிறது.  இந்த சங்கத்தில் துப்புரவுப் பணி யாளகள்,  ஆசிரியர்கள் உட்பட 197 பேர் அடங்குவர். இந்நிலையில் துப்புரவு தொ ழிலாளர்களுக்கு வழங்கப் பட்ட கடனுக்கு திண்டுக்கல் மாநகராட்சி வட்டியுடன் சேர்ந்து தொழிலாளர்கள் பெயரில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகை திண்டுக்கல் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் மாதாமாதம் மாநகராட்சி நிர்வாகம் செலுத்தி வந்தது.  இந்நிலை யில் அசல் மற்றும் வட்டி தராததாலும், பங்கு தொகைக்கான லாபத்தை தராததாலும் அதிருப்தி அடைந்த துப்புரவு தொழி லாளர்கள், திண்டுக்கல் சிக்கன நாணய சங்கத்தை வெள்ளியன்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  

இது குறித்து துப்புரவுத் தொழிலாளர்கள் கூறுகை யில், நாங்கள் கழிப்பறை களை சுத்தம் செய்து துப்புரவு தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு கடன் மற்றும் அசல், வட்டி வழங்கவில்லை. லாப பங்கீடு வழங்கவில்லை.  இது பற்றி கேட்கும் போது,  மாநகராட்சி நிர்வாகம் பணம் கட்டவில்லை என்று  கூட்டுறவு தரப்பில் தெரி விக்கப்படுகிறது.  இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். குழந் தைகள் படிப்பு, திருமணச் செலவுக்கு தவிக்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்  உட்பட அனைத்து அதிகாரிகளும் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற னர்.         கூட்டுறவு சங்கச் செய லாளர் பூபதி கூறுகையில்,   திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கடன் கொடுத்த தொழிலாளர்களுக்கு ரூ. 2 கோடியே 40 லட்சம் பாக்கி தர வேண்டும். மேலும் வட்டி யும் தர வேண்டும். தொழிலா ளர்களிடம் பிடித்தம் செய்து விட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 23 மாதங்க ளாக கட்டவில்லை. இதற்கு நாங்கள் மாநகராட்சி மீது வழக்கு தொடுத்துள்ளோம். இது எங்கள் பணம் அல்ல. மத்திய கூட்டுறவு வங்கியி டம் வாங்கிக்கொடுத்த பணம். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பணம் கட்டினால் தான் நாங்கள் அடுத்த நடவடிக்கையை எடுக்க முடியும். இதற்கு மாநகராட்சியில் கேள்வி கேளுங்கள் என்று கூறுகி றோம். துப்புரவு தொழிலாளர் கள் கேட்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

;