districts

img

காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்

தேனி,ஏப்.15- ராகுல்காந்தியின் எம்.பி., பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில்  பல்வேறு மாவட்டங்களில் ரயில் மறியல் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற  ரயில் மறியலில் 310 பேர்  கைது செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன், தேனி நகர தலைவர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர்   விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட 8 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது  செய்தனர்.  இப்போராட்டத்திற்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார்.  கிழக்கு மாவட்ட தலை வர்  ஸ்ரீராஜா சொக்கர் முன்னிலை வகித்தார். முன்னாள்  இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். கொடைரோடு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு இரயில் நிலை யத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அப்துல்கனிராஜா தலைமையில், நிலக்  கோட்டை வட்டாரத் தலைவர் கோகுல்ராஜ் முன்னிலை யில் 100-க்கும் மேற்பட்ட  கட்சியினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இராஜபாளையம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட  தலைவர் ரங்கசாமி உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.