மதுரை, ஜன.7- மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தோழர் வி.கே. பழ னியின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தோழர் பழனி மாடக் குளம் பேரூராட்சியின் துணைத்தலைவராக இருந்தவர். பழங்காநத்தம் புதுயுக வாலிப தேகப்பயிற்சி சாலையின் மேனேஜிங் டிரஸ்டியாக உள்ளார். பழங்காநத்தம் புதுயுக வாலிப தேகப்பயிற்சி சாலை யில் ஜனவரி 7 சனிக்கிழமை யன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், துணை மேயர் தி. நாகராஜன், மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், இரா. லெனின், எம். பால சுப்பிரமணியம், பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன் மற்றும் சர்வகட்சி தலை வர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.