districts

img

குமரியில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா துவக்கம்

நாகர்கோவில், ஜூலை 2- குமரி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மாணவ, மாணவியர் முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என 75ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் ஆகஸ்ட் 15 வரை  நடைபெறவுள்ள 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் துவக்க நிகழ்ச்சி வெள்ளியன்று (ஜூலை 1) நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித ஜோசப்  கான்வெண்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி திறந்த வெளி கலையரங்கில் நடை பெற்றது. மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் சுமார் 3500 பள்ளி  மாணவியர்கள் ஒருசேர தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடினர்.

  நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர்  பேசுகையில், நம் அனைவருக்கும்  கிடைக்கும் பல்வேறு வசதிகள் குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவம் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்பும் அதிகளவில் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்போது சுமார் 500 பள்ளிகள் உள்ளன.  ஆனால், நமது சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பள்ளிகள், மருத் துவமனைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. தற்போது, மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவ மனைகளின் வசதிகள் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. ஆனால், நமது மாநிலத்தில் அரசு மருத்துவ மனைகள் அதிகளவில் இருப்பதில் நாம் பெருமைக் கொள்ள வேண்டும். 75-ஆவது சுதந்திர திரு நாள் அமுதப் பெருவிழா நிகழ்வு எதற்காக அரசு நடத்துகிறது என்பதை மாணவ, மாணவியர்கள் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து, நாகர்கோ வில், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற அமுதப் பெரு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் கலந்து கொண்டு மூவர்ண பலூன் களை பறக்கவிட்டும். தேச தலை வர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்களை வாழ்த்தியதோடு, கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியர்களுக்கு தனது பாராட்டுக்களையும் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனை வர்.புகழேந்தி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேது ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;