districts

img

ரூ.54.81 இலட்சம் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்

தூத்துக்குடி, ஆக. 18 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் கேம்பலாபாத் ஊராட்சி மன்ற வளாகத் தில் திருக்களூர் கிராமத்தி ற்கான மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலை மையில் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, கூட்டு றவுத் துறை, மாவட்ட தொழில் மையம், சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, முதன்மை கல்வி அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், வட்டார போக்கு வரத்து அலுவலர், குடிநீர் வடிகால் வாரியம்  உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர் கள் திட்ட விளக்கவுரை யாற்றினர். முகாமில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), கூட்டுறவுத்துறை, கால்நடைத்துறை, வரு வாய்த்துறை, மக்களை தேடி  மருத்துவம் ஆகிய துறை களின் கீழ் 114 பயனாளி களுக்கு இன்றைய தினம் ரூ.54.81 இலட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், வழங்கினார். முன்னதாக வேளாண் மை, மக்கள் நல்வாழ்வு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி உள்ளிட்ட துறை களின் சார்பாக அமைக்க பட்டிருந்த அரங்கினை மாவட்ட ஆட்சியர் பார் வையிட்டார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, இணை இயக்குநர் வேளா ண்மை முகைதீன், துணை இயக்குநர் சுகாதார பணி கள் பொற்செல்வன், ஏரல் வட்டாட்சியர் கண்ணன், கேம்பலாபாத் ஊராட்சி மன்ற தலைவர் சபிதா சர்மிளா, துணைத்தலைவர் காஜா உதுமான், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;