சென்னை, பிப்.7 - சென்னை மாநகராட்சி தேர்தலில், பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத் துள்ளது. சென்னை மாநகராட்சி யில், மண்டல அளவில் பெண்களுக்கு 50விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மொத்த இடங்க ளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஜன.17ந் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை என்றும், சில மண்ட லங்களில் 50 விழுக்காட் டிற்கு அதிகமான வார்டு கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக வும் கூறி முத்துராஜ் என்ப வர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ் வர்நாத் பண்டாரி மற்றும் நீதி பதி பரத சக்கரவர்த்தி அமர் வில் திங்களன்று (பிப்.7) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 66 லட்சத்து 72 ஆயிரத்து 103. இதில் 70 விழுக்காடு மக்கள் 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னையின் மையப்பகுதியில் வசிக்கின்ற னர். 20 லட்சத்து 25 ஆயிரத்து 371 பேர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிக ளில் வசிக்கின்றனர். மக்கள் தொகை அடிப் படையில் வார்டுகள் பிரிக்கும் போது நகரின் மையப் பகுதியில் வார்டு கள் சிறியதாகவும், பிற பகுதி களில் பெரியதாகவும் இருக் கும். அந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை சம மான அளவில் மேற்கொள் வதில் சிக்கல் எழும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளி யிட்ட பின் எப்படி தலையிட முடியும் எனவும், அரசியல் சாசன தடை உள்ள நிலை யில் வார்டு வரையறையில் எப்படி தலையிட முடியும் எனவும் கேள்வி எழுப்பி மனுதாரர் தரப்பு விளக்க மளிக்க அறிவுறுத்தினர். உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு களை மேற்கோள் காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறி ஞர் ஓம்பிரகாஷ் வாதங் களை முன் வைத்தார். சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர், 2018ம் ஆண்டு, வார்டு மறு வரையறை செய்து அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வழக்கு தொடர்ந் திருந்தால், மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப் பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.