districts

சென்னை விரைவு செய்திகள்

ஆசிரம மேலாளர் உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

விழுப்புரம், மார்ச் 1- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது.  இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் சதீஷ், அய்யப்பன், கோபிநாத் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பிஜூமோன், சதிஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தினர்.பின்னர், 6 பேரையும் மீண்டும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆசிரம மேலாளர் பிஜூ மோன் உள்ளிட்ட 3 பேருக்கும் மேலும் 14 நாட்கள் காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். வருகிற 14 ஆம் தேதி வரை  காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


ரூ.40 கோடியில்  அரசு மருத்துவமனை

குடியாத்தம், மார்ச் 1- குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான நவீன வசதிகளின் கூடிய கட்டிடங்கள் கட்ட அரசு 40 கோடி ரூபாயை ஒதுக்கியது.  சென்னையில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குடியாத்தத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி களை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடங்கள் கட்டுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.


தூய்மைப் பணியாளர்களை அதிகரிக்கக் கோரிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 1- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு கூட்டம் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சினேகா உள்ளிட்ட பொது சுகாதாரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி சாலைகளில் மாடுகள் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மக்கள் தினசரி கூடும் திரையரங்கு வளாகங்கள், கழிப்பிடங்கள் சுகாதாரமாக பேணப்படவில்லை. பேருந்து நிலைய கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளே நுழைய முடியாத அளவு மிக மோசமாகவும், துர்நாற்றம் வீசி மக்களுக்கு நோய் பரப்பும் மையமாக உள்ளது. அதேபோல் மாநகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 25 விழுக்காடு கூட தூய்மை பணியாளர்கள் பணி அமர்த்தப்படாததால் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், தினசரி குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி நிற்கிறது. மக்களின் தேவைக்கேற்ப போதிய நவீன கழிப்பறை வசதிகள் இல்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது சுகாதார குழு உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணை யாளரிடம் வலியுறுத்தினர்.  கோரிக்கைகளை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கு தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் கூறி னார்.


அண்ணாமலைப் பல்கலையில் தேசிய அறிவியல் தினவிழா

சிதம்பரம், மார்ச் 1- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தினவிழா துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ் பேசுகையில், “பன் நோக்கு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும், விவசாயம், பொறியியல் மற்றும் மருத்துவத் துறையில் அறிவியலின் பங்கு குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மதுரை பல்கலைக்கழக முன்னாள் உயிரியல் துறை பேராசிரியர் டி.ஜெ. பாண்டியன் பேசுகையில், “அறிவி யல் தின சிறப்புகளையும், நமது அன்றாட வாழ்க்கை அறிவியலின் பயன்பாட்டையும் விளக்கினார். கடந்த ஆண்டிற்கான சிறந்த ஆராய்ச்சியாளர் விருதும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் வெ.ராமசாமி நன்றி கூறினார்.