அருமனை, செப்.18- கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சாலு மூடு ஊராட்சியில் கைதகம் புதுக்குளம் மற்றும் கோட்டயத்துக்குளம் அமிர்த சரோ வர் திட்டத்தின் படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி பணியினை மத்திய திட்ட குழு வினராகிய ஜல் சக்தி அபியான், மண்டல அலுவலர் என். கட்டே, துணைச் செயலா ளர் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, உதவி செயற் பொறியாளர் ஜினு ஆண்டனி, பணி மேற் பார்வையாளர் கி றைஸ்ட் ஜஸ்டின் ராஜ் மற்றும் ஊராட்சி தலைவர் தீபா செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.