கொச்சி, டிச.10- கேரளத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன் நியூட்ரல் விளை நிலங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். உணவு தன்னிறைவு அடைய நாட்டை உயர்த்த வேண்டும். இதனுடன் சுற் றுச்சூழல் சமநிலையையும் பேண வேண்டும். இங்குதான் கார்பன் நியூட் ரல் என்ற கருத்து செயல்படுகிறது. 140 தொகுதிகளிலும் கார்பன் நியூட்ரல் விவசாய நிலங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.