மதுரை, மே 15- மதுரை மாவட்டம் மேலூரில் முதன்முறையாக நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புது தில்லி, மதுரை மாவட்ட ஆணைக்குழு. மதுரை மாவட்ட இல்லம் தேடிக் கல்வி, மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர் நிலைப்பள்ளி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணை ந்து 38-வது தேசியப் புத்தகக் கண் காட்சியை மேலூர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. புத்தகக் கண்காட்சி தொடக்க நிகழ்விற்கு பள்ளி யின் தாளாளர் எம்.ஷாஜ ஹான் தலைமை வகித்தார். புத்தகக் கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தா மரை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மணி மேகலாதேவி, செல்வி ராம் கிளினிக் மருத்துவர் கணே சன் ஆகியோர் புத்தகங்க ளை வாங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தனர். மேலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பெரியவர், இரண்டாம் நிலை நூலகர் சீதாலட்சுமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் ஆர். மகேந்திரன், அரசு கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் துவக்கப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அல் அமீன் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தகக் கண்காட்சி மே 22-ஆம் தேதி வரை காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி நடைபெறுகிறது. அனைவரும் படித்துப் பயன் பெறும் வகையில் பொது அறிவு, சுய முன் னேற்றம், விஞ்ஞானம், பழமொழிகள், அறிவியல், புகழ் பெற்ற நாவல்கள், போட்டித் தேர்வுப் புத்த கங்கள், தொழில் நுட்பம் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன அனைத்துப் புத்தகங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படு கிறது. மேலூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொது மக்கள் பயனடையுமாறு மேலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர், பேராசிரி யர்கள் கேட்டுக்கொண்டுள் ளனர்.