சிறுமியை துன்புறுத்தியவர் மீது பாய்ந்தது போக்சோ
பழனி, ஏப்.5- பழனியை அடுத்துள் ஓபுளாபுரத்தைச் சேர்ந்த நாரா யணன் என்பவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதை குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. குழந்தையின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி. செல்வராஜ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கௌரி ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமி யின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தனர். இதை யடுத்து நாராயணன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் தற்கொலை
தேனி, ஏப்.5- தேனி கம்பம் பாரதியார் நகர், தெற்குத்தெருவை சேர்ந்தவர் கோகிலா (19). இவர் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரும கம்பம் ஆதி சக்தி விநாயகர் தெருவில் குடியிருக்கும் செண்பகமூர்த்தி என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். செண்பகமூர்த்தி கடந்த 2.3.23 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கோகிலா மனமுடைந்த நிலையில் காணப் பட்டார் இந்தநிலையில் கடந்த 2-ஆம தேதி அதிகாலை கோகிலா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலாவும் உயிரிழந்தார். கம்பம் தெற்கு காவல்துறையினர் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதி அடையாளப் பனியன் அணிந்து ரகளை 11 பேர் மீது வழக்கு
சாத்தூர், ஏப்.5- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது க.மேட்டுப்பட்டி. இங்கு பங்குனிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னதாக வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் சாதி சம் பந்தப்பட்ட பணியன்கள், ரிப்பன்கள் கட்டக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திருவிழா நடைபெறும் போது சிலர், முடிவை மீறி சாதி சம்பந்தமான பணியன்கள் அணிந்ததோடு, இரு சக்கர வாகனத்தில் பிரச்சனை செய்யும் நோக்கத்தோடு, சாலையை மறைத்து பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாகச் சென்றுள்ளனர். எனவே, இதுகுறித்து, மேலமடை கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரன், இருக்கண்குடி காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மேட்டுப்பட்டி யைச் சேர்ந்த கார்த்திக், மூர்த்தி, சீனி, மணிகண்டன், சேதுபதி உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டவர்கள் மீது வழக்குப் பதிவு
திருவில்லிபுத்தூர், ஏப்.5- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் ராமலட்சுமி-க்கும் கோட்டையூ ரைச்சேர்ந்த ராஜகுமாரன் என்பவருக்கும் 2021- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்ததும் ராஜகுமாரன் ராணுவப் பணிக்கு சென்றுவிட்டார் குடும்பச் செலவுக்கு பணம் அனுப்பவும் இல்லை ராமலட்சுமி பல முறை தனது கணவரிடம் கேட்டும் பணம் அனுப்பாததால் ராணுவத் தலைமை அதிகாரிகளுக்கு மனு செய்ததன் அடிப்படையில் அவர்கள் தலையிட்டு ராஜகுமாரனுக்கு ஒரு மாத விடுமுறை கொடுத்து வரும்பொழுது குடும் பத்துடன் வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ராஜகுமாரன் குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ மனு கொடுத்திருந்தார் அதே நேரத்தில் ராமலட்சுமி ஜீவனாம்சம் கேட்டு கொடுத்த மனு மீதான வழக்கு நிலுவையில் இருந்தது இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றம் தலையிட்டு இருவருக்கும் ஆலோ சனை வழங்கி சேர்ந்து வாழ அனுப்பி வைத்தது இந்த நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி ராஜகுமார னும் அவரது தாயார் ஆய்மணியும் 50 பவுன் நகை கூடுதலாக வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி ராம லட்சுமியை துன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படை யில் நீதிபதி உத்தரவின் பேரில் திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் ராமலட்சுமி யின் கணவர் ராஜகுமாரன், மாமியார் ஆய்மணி இருவர் மீதும் வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவு செய் துள்ளனர்.
பாலியல் அத்துமீறல்; 6 ஆண்டுகள் சிறை
பழனி, ஏப்.5- திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே மன வளர்ச்சி குன்றிய பத்து வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட காளிமுத்து (45) என்பவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்ட னையும் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்ப ளித்தது. பாலியல் அத்துமீறல் சம்பவம் 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதை சிறுமியின் பெற்றோர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். சங்கத்தின் மாவட்ட மற்றும் பழனி நகர், பழனி ஒன்றிய நிர்வாகிகள் இப்பிரச்சனையில் தலை யிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பபை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு வரவேற்றுள்ளது.
அநியாய வரிவிதிப்பிலிருந்து தப்பிய ஆடு, மாடு, கோழிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல், ஏப்.5- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொட ர்ந்து அடாவடி வரி வசூல் செய்த ஒப்பந்தகாரர்களிட மிருந்த வாரச்சந்தையை ஒட்டன்சத்திரம் நகராட்சி தன் கட்டுப்பாட்டில் எடுத் துக்கொண்டுள்ளது. இந்த முடிவை தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வரவேற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் வாரச் சந்தையை எடுத்திருந்த ஒப்பந்ததாரர்கள் மாட்டுக்கு ரூ.450, ஆட்டுக்கு ரூ.200, கோழிக்கு ரூ.140 என வரி யாக வசூலித்து வந்தனர். ஒப்பந்ததாரர்களின் இந்த அடாவடி வசூலைக் கண் டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. இந் தப் பிரச்சனையை ஒவ் வொரு மாதமும் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து எழுப்பி வந்த னர். இப்பிரச்சனையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆணையர் விவசாயிகள் குறை தீர் கூட் டத்திற்கு வராமல் தவிர்த் தார். இந்நிலையில் வாரச் சந்தை ஏலம் விடப்பட்டது. நகராட்சி மன்றத்தலை வர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள் ளைச்சாமி, ஆணையர் சக்தி வேல் ஆகியோர் சந்தை வரி வசூல் செய்வதை நக ராட்சியே தன் கட்டுப்பாட் டில் செய்ய முடிவெடுத்த னர். அதன்படி திங்கள் கிழமை முதல் நகராட்சி கட்டுப்பாட்டில் வாரச்சந்தை வரிவசூல் நடைபெற்றது. சந்தைக்கு வரும் நபருக்கு ரூ.50, கால்நடைகளுக்கு ரூ. 100, கன்றுக்குட்டிக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டது. ஆட் டுக்கு ரூ.25, கோழி, சேவல், வாத்துக்கு ரூ.20 என கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது.
குளத்தில் மூழ்கி 5 பேர் பலி
சென்னை, ஏப்.5- பங்குனி உத்தர தீர்த்த வாரி நிகழ்ச்சியின் போது, மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி 3 கல்லூரி மாண வர்கள் உள்பட 5 பேர் பலி யாகினர். சென்னையை அடுத்த மூவரசம்பட்டில் தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பங்குனி உத்தி ரத்தை முன்னிட்டு அங்குள்ள தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் அர்ச்சகர்கள் உள் ளிட்டு 30க்கு மேற்பட்டோர் சூலத்தை குளத்தில் மூழ்கி எடுத்தனர். குளத்தில், 3வது முறை முழ்கும் போது தன்னார்வலராக இருந்த ஒருவர் சேற்றில் சிக்கி மூழ்கி னார். அவரை காப்பாற்ற முயன்ற 4 பேரும் முழ்கி னர். இதனையடுத்து உடல் கள் மீட்கப்பட்டு பிரேத பரி சோதனைக்காக குரோம் பேட்டை மருத்துவ மனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணம் தீர்த்தவாரி நிகழ்ச்சிக் காக குளத்தில் இறங்கி எதிர் பாராதவிதமாக மூழ்கி உயிரி ழந்த சூர்யா (22), பானேஷ் (22), ராகவன் (22), யோகேஸ் வரன் (21), ராகவன் (18) ஆகி யோரிடன் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தேவகோட்டை கல்லூரியில் கருத்தரங்கம்
சிவகங்கை, ஏப்.5- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகி செல்வராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத் தின் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஜீவசிந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர், நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேசினார். இரா.கண்ணதாசன் வர வேற்புரை நிகழ்த்தினார். மா.ரெத்தினேஸ்வரி நன்றியுரை யும், முனைவர் சீ.வள்ளியம்மை தொகுப்புரையும் வழங்கி னர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் அன்பரசு, தேவகோட்டை கிளைத் தலைவர் போஸ், சாதிக், கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பேராசிரியர் முரு கன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மானாமதுரை எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோவில் விழா
மானாமதுரை, ஏப்.5- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கேட்டவரம் தரும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பத்து நாள் பங்குனி உத்திரத் திருவிழா அக்கி னிச்சட்டி எடுப்பு திருவிழாவோடு வியாழனன்று நிறை வடைகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பெ. ராக்குலெட்சுமணன் சுவாமிகள், செர்டு இயக்குநர்கள் பாண்டி, போதும்பொன்னு ஆகியோர் செய்திருந்தனர். காப்புக்கட்டுதல் விழா, பூசொரிதல் விழா, மா விளக்கு பூஜை, பாலாபிஷேகம், நெய்விளக்கு ஏற்று தல், திருவிளக்கு பூஜை, சந்தனக்காப்பு விழா, பொங் கல்விழா ஆகியவை நடந்தேறியுள்ளது. இறுதியாக அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடை பெறுகிறது. 300-க்கும் மேற்பட்டோர் அக்னிச்சட்டி எடுக்க உள்ளனர். அக்கினிசட்டி எடுக்கும் நிகழ்வில் ஆயிரக்க ணக்கான பக்தர் பங்கேற்பர் என்றார்.
ஊராட்சி முயற்சியால் மூடப்பட்ட பள்ளி பத்து ஆண்டுகளுக்கு பின் திறப்பு
திருவில்லிபுத்தூர், ஏப்.5- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கோட்டைப்பட்டி ஊராட்சி, இங் குள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளி பத்தாண்டுகளாக செயல்படவில்லை. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்கவேண்டுமென ஊராட்சி மக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். இதையடுத்து ஊராட்சித் தலைவர் சதீஷ்குமார் பள்ளியைத் திறக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து பள்ளியை ஆய்வு செய்த வட்டாட்சியர் பள்ளி கட்டிடம் நல்ல நிலைமையில் உள்ளதை உறுதி செய்தார். குழந்தை களின் பெற்றோர்களிடமும் அவர் பேசினார். பெற்றோர் கள் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பு வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பள்ளியை மீண் டும் திறக்க மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். அமைச்சரிடம் கோரிக்கை விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் கோட்டைப் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டியில் உள்ள அரசு மாணவர் விடுதியை இடிக்க அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் இடிக்கப்பட்ட இடத்தை பொதுப்பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். விடுதிக்கு வேறு இடம் தேர்வு செய்ய வேண்டுமென ஊராட்சித் தலை வர் சதீஷ்குமார் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
‘கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.32 கோடி கடன் தள்ளுபடி அமைச்சர் தகவல்
சிவகாசி, ஏப்.5- சிவகாசி வட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் பெற்ற ரூ.32 கோடிக்கான கடன்களை தமிழகஅரசு தள்ளுபடி செய்துள்ளது என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார். திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு பல் நோக்கு சேவை மைய புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ராஜ லட்சுமி முன்னிலை வகித்தார். புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள கடன் தொகைகளை வழங்கி தொழில் முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது : முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுபேற்ற பின் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றியுள்ளோம். ஐந்து பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளோம். இதன் மூலம் சிவகாசி தாலுகாவில் 9,858 பேருக்கு ரூ.32 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக் களின் ரூ.7 கோடியே 24 லட்சம் மதிப்பிலான கடன்களை யும் தள்ளுபடி செய்துள்ளோம் என்றார். சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா, துணைமேயர் விக்னேஷ்பிரியா, யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ரமணா உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதர் சங்கம் ஆய்வு
திருநெல்வேலி, ஏப்.5- நெல்லை மாவட்டம் முக்கூடல் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத சங்கம் திடீர் ஆய்வு நடத்தியது. மாதர்சங்க ஒன்றிய தலைவரும் பாப்பாக்குடி ஒன்றிய கவுன்சிலருமான சமாதானம், ஒன்றிய துணைதலைவர் பார்வதி மற்றும் பலர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
நகராட்சி சர்வரில் மாற்றம் செய்யும் பணி தாமதம்: அலைக்கழிந்த மக்கள்
விருதுநகர், ஏப்.5- தமிழ்நாடு முழுவதும் நகராட்சி அலுலவங்களில் உள்ள கணினிகளை இணைய செயல்பாட்டின் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் முழுமையடையவில்லை. இதனால் மக்கள் வரிகளைச் செலுத்த முடியாமல் அலைக்கழிந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 142 நகராட்சிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வரி வசூல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கட்டடங்களுக்கான வாடகை, தொழில் உரிமம், பிறப்பு- இறப்புச் சான்றிதழ் கட்டணம், பாதாளச் சாக்கடைக் கட்டணம் ஆகியவை கணினி மூலம் வசூல் செய்யப்படுகிறது. வரி மற்றும் கட்டண பாக்கிகள் அனைத்தும் ஒரே சர்வரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தெந்த நகராட்சியில், எவ்வளவு வரி இனங்கள வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என நகராட்சி நிர்வாக இயக்குநர், மண்டல நிர்வாக இயக்குநர் ஆகியோர் பார்வையிட முடியும். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை ஊழியர்கள் வரி வசூல் பணிகளில் ஈடுபட்டனர். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சர்வரில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் நிகழாண்டுக்கான வரி இனங்களை வழக்கம் போல வரி வசூல் மையங்களில் மக்கள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள், புதனன்று காலை, நகராட்சி அலுவலகத்திற்கு குடிநீர்க் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டணம், தொழில் உரிமம் செலுத்தச் சென்றனர். சர்வர் வேலை செய்யவில்லை. இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. நாளை வாருங்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு, நகராட்சிகளின் சர்வரில் மாற்றம் செய்யும் பணியை விரைவாக முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.