அருமனை, அக். 26- கன்னியாகுமரி மாவட் டம் மேல்புறம் வட்டாரம் பாகோடு பேரூராட்சி முன் னாள் தலைவரும் குழித் துறை வழக்கறிஞர் சங்கத் தின் முன்னணி தோழரும் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டார குழு உறுப்பின ருமான றசல் ராஜ் பத்தாவது ஆண்டு நினைவு தினம் அக்டோபர் 26 புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. அன்னாரது நினைவிடத் தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் தலைமையில் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மூத்த தோழர் கே.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அனந்தசேகர், மாவட்டக் குழு உறுப்பினர் மோகன் குமார், மார்த்தாண்டம் வட்டார செயலாளர் ஷர்தார் ஷா, மேல்புறம் வட்டார செய லாளரும் பாகோடு பேரூ ராட்சி தலைவருமான ஆர். ஜெயராஜ், வட்டார குழு உறுப்பினர்கள் ஹென்றி, கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோ பர் உட்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மாலையில் பிளாக் ஆபிஸ் சந்திப்பில் நினைவு தின பொதுக்கூட்டம் நடை பெற்றது.