districts

img

பழங்காநத்தம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ.30-  மதுரை மாநகராட்சி நிர்வாகம் பழங்காநத்தம் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையம் பிரசவ மருத்துவமனை முழுமையாக செயல்பட நடவடிக்கை  எடுத்திட வேண்டும் . மழை காலங்க ளில் நேரு நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுக்க வாய்க்  காலை தூர்வாரி பாலம் அமைத்திட வேண்டும். மாநகராட்சி ஆரம்ப பள்ளி  காம்பவுண்ட் சுவர், பாத்ரூம் வசதி, கூடு தல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். குண்டும் குழியு மான சாலைகளை சீர்படுத்த  வேண்டும்  என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு  1 ஆம் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. பழங்காநத்தம் பேருந்து நிலையம் எதிரில்  மாடக்குளம் மெயின் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  பகு திக்குழு உறுப்பினர் பி. மார்நாடு தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன்,  பகு திக்குழு செயலாளர் கு. கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  ஏ. பி.  சிவராமன், பி. மல்லிகா ஆகியோர் பேசினர்.