விருதுநகர், ஏப்.7- விருதுநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆர்.பொன்னி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், குழந்தைகள் தங்களது பள்ளியில் நூல கங்களில் உள்ள புத்தகங்களை பயன் படுத்தி வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி செய்தித் தாள் களை படித்து தங்களது பொது அறி வினை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஒரு இலக்கினை நிர்ண யித்து அதை அடைய முழு முயற்சி செய்திட வேண்டும். பெற்றோர் தவிர வேறு யாரும் உங்களது புகைப்படத்தை கேட்டால், கைப்பேசியில் பகிரக் கூடாது. அவ்வாறு பகிர்ந்தால், உங்களது புகைப்படத்தை தவ றாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் களை 181 மற்றும் 1098 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று பேசினார். மேலும் இதில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மனோகர், துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சணா, மருத்து வர்கள் ஆயிஷாகனி, ஜீவரேகா, பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.