districts

மதுரை விரைவு செய்திகள்

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண அருமனையில் பேருந்து நிலையம்  வாலிபர் சங்க மாநாடு கோரிக்கை

அருமனை, ஜூன் 29- அருமனையில் தொடர்ந்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண அருமனை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடை யூறாக சாலையின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அருமனை வட்டார மாநாடு வலியுறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின்  அருமனைவட்டார எட்டாவது மாநாடு நடைபெற்றது. வட்டாரத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எட்வின் பிரைட், அருமனை பேரூராட்சி 7ஆவது வார்டு உறுப்பினர் ஜெய ராணி, முன்னாள் வட்டாரத் தலைவர் ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் வி.ரமேஷ்  ஆகியோர் பேசினர்.  வட்டாரத் தலைவர் சங்கீத், செயலாளர் ரெஜின், பொருளாளர் வி.எம். லெதிகாமேரி உட்பட 12 பேர் கொண்ட வட்டாரக்குழு தேர்வு  செய்யப்பட்டது. புகழ்பெற்ற சிதறால் மலைக்கோயில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க மாவட்ட சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் தொடரும் 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூர் கோவிலில்  ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்

தூத்துக்குடி, ஜூன் 29 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டி யல் மூலம் ரூ.3.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தங்கம் 3 கிலோ 735 கிராமும், வெள்ளி 35 கிலோ 760 கிராமும் கிடைத்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், பொருட்கள் இந்த மாதம்  3வது முறையாக செவ்வாயன்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில், தக்கார் பிரதிநிதி யும் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் எண்ணும் பணி நடந்தது.  இதில், ரூ.1 கோடியே 20 லட்சத்து 23 ஆயிரத்து 362 கிடைத்துள்ளது. கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 கிடைத்தது. அதே போல் 22-ந் தேதி ரூ.70 லட்சத்து 54 ஆயிரத்து 797 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் மூன்று முறை எண்ணப்பட்டதில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து  195 கிடைத்துள்ளது. அதேபோல் மொத்தத்தில் தங்கம் 3 கிலோ 735 கிராமும், வெள்ளி 35 கிலோ 760 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 1,445 கிடைத்துள் ளது.

உழவர் சந்தையில் மாலை நேரக் கடைகள்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, ஜூன் 29 “வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தூத்துக் குடி உழவர் சந்தையில் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலான மாலை நேரக் கடைகள் விவசாயிகளின் விளை பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகை கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட அரசால் அறிவுறுத் தப்பட்டுள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களின் விளைபொருட்களையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களையும்  விற்க மாலை நேரத்தில் உழவர் சந்தையினை இலவசமாக பயன்படுத்தி பயன்பெறுவதுடன், நுகர் வோருக்கும் பயன்படும் வகையில் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தூத்துக்குடி அவர்களை தொடர்பு கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

சேரன்மகாதேவியில் 2 குழந்தைகளுக்கு சாதி, மதம் அற்றவர் சான்றிதழ்

திருநெல்வேலி, ஜூன் 29- சேரன்மாதேவி தாலுகா பாப்பாக்குடி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜா மகன் ஜான் விக்டர் (வயது 36). இவர் சென்னையில் தொழில் செய்து வரு கிறார். இவரும், விழுப்புரத்தை சேர்ந்த சுமித்ரா (33) என்பவரும் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு ஆரா தமிழினி (5), அக்சரா மகிழினி (2) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் ஜான் விக்டர் தனது குழந்தைகள் 2 பேருக்கும் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரன்மா தேவி தாலுகா அலுவலகத்தில் விண்ணப் பித்து இருந்தார். இதுகுறித்து வருவாய்த் துறையினர் மூலம் விசாரணை நடத்தப் பட்டு, அந்த 2 குழந்தைகளுக்கும் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.  தாசில்தார் பாலசுப்பிரமணியம், குழந்தைகளின் தந்தை ஜான் விக்டரிடம் சான்றிதழை வழங்கினார். இதுபோன்ற சான்றிதழ் நெல்லை மாவட்டத்தில் வழங் கப்படுவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழாய் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

திருநெல்வேலி, ஜூன் 29- நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன்நகர் குளத்தாங்கரை பகுதியில் மெயின்ரோட்டில் வளைவு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பள்ளிவாசல், கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த வளைவு பகுதியில் ஆற்று தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. தொடர்ந்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு பள்ளம் தோண்டப்பட்டு குழாய் சீரமைக்கப்பட்டது. ஆனால் குழாயை சீரமைத்த பின்னர் பள்ளத்தை மூடாமல் அப்படியே போட்டு விட்டனர். சுமார் ஒரு வாரமாக பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் சிரமம் அடைந்துள்ளனர்.  அந்த பகுதியில் உள்ள வளைவான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது பள்ளமும் மூடப்படாமல் இருப்பதால் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக பள்ளத்தை மண் கொண்டு நிரப்பி தற்காலிகமாக அதன்மீது சாலை அமைத்து போக்குவரத்து சீராக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் மனு அளித்துள்ளார்.

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 23 சென்ட் அரசு நிலம் மீட்பு

தூத்துக்குடி, ஜூன் 29 பேய்க்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 23 சென்ட் நிலம் வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே ஸ்ரீவெங்க டேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குருகால்பேரி அருந்த தியர் காலனி அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மரங்கள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் அருகே 23 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் கம்பிவேலி அமைத்து தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சாத்தான்குளம் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.  இதையடுத்து ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, காவல் ஆய்வாளர்  பாஸ்கரன் தலை மையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு செவ்வாய்க் கிழமை காலையில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தனியார் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தில் இருந்த கம்பிவேலி உள்ளிட்டவற்றை பொக்லைன்  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் அந்த அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டு பலகை வைத்தனர்.  இந்த பணியின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், சர்வேயர் ஜெயசுதா, வருவாய் ஆய்வா ளர் ஜெயா, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பசாமி, டாலி சுபலா, துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.  மேலும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்தப்படும் என சாத்தான்குளம் தாசில்தார் தெரிவித்தார்.

கஞ்சா விற்ற 5 பேர் கைது

தென்காசி, ஜூன் 29  தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆயிரப் பேரியைச் சேர்ந்த பார்வதி, ராம லட்சுமி ஆகிய இருவர் மீதுகுற்றாலம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலு க்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 2.5 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.  இதேபோல் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கடங்கநேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடு பட்ட நெட்டூர்பகுதியை சேர்ந்த தேவராஜன், சுப்புகுட்டி, முப்பிடாதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்க ளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

;