districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகோள்

கன்னியாகுமரி, பிப்.17- கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்தறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்  செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் த.மனோகர ஜஸ்டஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள் ளதாவது: அனைத்துப்பிரிவினருக்கும் சமவாய்ப்பு அளிக்கத்தக்க சூழல் உருவாக்கப்பட வேண்டும், குறிப்பாக மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பவர்களாக மட்டுமல்லாமல் வாக்கு களை பெற்று தேர்ந்தெடுக்கப்படும் நம்பிக்கையூட்டும் செயல் முறைகளை அரசியல் இயக்கங்களும் சமூகமும் உரு வாக்க வேண்டும். முன்னுதாரணமாக கொல்லங்கோடு நகராட்சியின் 11 ஆவது வார்டில் போட்டியிட சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் முகமது பெரோஸ்கானுக்கும், ஆற்றூர் பேரூராட்சி 2 ஆவது வார்டில் போட்டியிட என்.பி.பென்னட்ராஜுக்கும் (பாதுகாவலர்) வாய்ப்பளித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஊழலற்ற மக்கள் சேவைக்கும், சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஒற்று மையை நிலைநாட்டவும் உறுதியளித்துள்ள வேட்பா ளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அறிக்கை யில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.