districts

மதுரை முக்கிய செய்திகள்

மார்த்தாண்டம் அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா

குழித்துறை, டிச. 3 மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மார்த்தாண்டம் கல்வி மாவட்ட அலுவலர் எம். முருகன் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆர். பிரீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை  எம். நிர்மலா ஆண்டறிக்கை வாசித்தார். கல்வியாளர் ஆர். கிருஷ்ணதாஸ், மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் என். சுபானந்த ராஜ், மாவட்ட பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பி.பி.கே. சிந்துகுமார், குழித்துறை நகர்மன்ற உறுப்பி னர்கள் ஜூலியட் மெர்லின் ரூத், ஜலீலா ராணி ஆகியோர் பேசினர். குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிர்  கல்லூரி உதவி பேராசிரியை ஸ்ரீலெஜா சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக உதவி தலைமை ஆசிரியை என். கிறிஸ்டல் லீலாபாய் வரவேற்றுப் பேசினார். தொழில்கல்வி ஆசிரியை ரமணி நன்றி கூறினார். முன்னதாக நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் இடையே மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கழிவுகளை கொட்டிச் சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது 

தென்காசி, டிச. 2 தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாரணாபுரம் பகுதியில் இரண்டு முறை கேரளாவிலிருந்து வாகனத்தில் கழிவு களை கொண்டு  வந்து யாருக்கும் தெரியாமல் ஒரு சிலர் கொட்டி சென்றுள்ளனர். இது தொடர்பாக  திருவேங்கடம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவல் துறை யினர் விசாரணை நடத்திவந்த நிலையில் கழிவுகளை கொட்டி சென்றகொல்லம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரானஅசீம்(23) மற்றும ஆட்கொண்டார்குளம் பகுதியை சேர்ந்த முருகன் என்ற வெள்ளத்துரை (50)  ஆகியோரை 30.11.2022 அன்று காவல் துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில்  இவ்வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம் அப்துல் சமத்(52) என்பவரை காவல் துறையினர் விசாரணை  செய்ய முயன்ற போது காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக  மேற்படி நபரை  சார்பு ஆய்வாளர் கமலா தேவி  கைது செய்து சிறையில் அடைத்தார்.மேலும் கழிவுகளை கொண்டு வர பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.  மதுபாட்டில்கள் வைத்திருந்தவர்   கைது  தென்காசி: தென்காசி மாவட்டம் கேவி நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த  பெரு மாள்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பாண்டி(53)  மீது சார்பு ஆய்வாளர்  ராமச்சந்திரன்  வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறை யில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த 96 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது .

இளம்பெண்ணுடன் பெற்றோர் விஷம் குடிப்பு: தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி,டிச.2 உடன்குடி அருகே இளம் பெண்ணுடன் பெற்றோர் விஷம் குடித்த சம்பவத்தில் தற்கொலை க்கு தூண்டியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன் குடி அருகே உள்ள சிறுநாடார்குடி யிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50). இவர்களது மகள் சந்தியா (27). ரகுபதி கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தற்போது அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தார் விசா ரணை நடத்தினர். சந்தியாவிற்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முதலூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் என்பவருடன் திரு மணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜ லட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவ ஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர். மேலும் அரிகரசுதன், சந்தியா வை தாக்கியதாகவும் கூறப்படுகி றது. இதனை சந்தியா தனது தந்தை ரகுபதியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தந்தை, தாய்  மற்றும் சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அரி கரசுதன், சத்தியசீலன், ராஜலெட் சுமி, ஜீவஆனந்த் உள்ளிட்ட5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு  தலையணையில் குளிக்க   மீண்டும் அனுமதி

திருநெல்வேலி, டிச. 2- வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து களக்காடு தலையணை யில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  திருநெல்வேலி களக் காடு: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக மித மான மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணை யில் புதன் காலை முதல் தண்ணீர் வரத்து அதிக ரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டா ற்று வெள்ளம் பாய்ந்தோ டியது. இதையடுத்து தலையணையில் சுற் றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.  இந்த நிலையில் வியாழனன்று வெள்ளம் சற்று குறைந்தது. இதை யடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்கு னர் ரமேஷ்வரன் உத்தர வின் பேரில் சுற்றுலா பய ணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தகவலை வனச்சரகர் பிரபாகரன் தெரிவித்தார்.

இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடி,டிச.2 ஆத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், முக்காணி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் மகள் விஜயலட்சுமி (22). இவர் வியாழனன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக் கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது உடல், பரிசோதனைக்காக தூத்துக் குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பவருக்கு விருது

தூத்துக்குடி,டிச.2 சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவ ருக்கு விருது வழங்கப்படும் என்று தூத்துக்குடி, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.   இத்திட்டம் தோட்டக்  கலை மற்று ம் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும்.  பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி இலகுவாக ஏறுவதற்காகவும்,  பனை நுங்கு மற்றும்  பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வ தற்காகவும், கருவிகளைக் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சிக ளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறு வனங்கள் மற்றும் முற்போக்கு மிக்க விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில்  சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்படும். சிறந்த பனையேறும் இயந்திர ம்  கண்டுபிடிப்பாளரை கீழ்க்குறிப்பிடப்படுபவர்களால் அமைக்கப்படும் குழு முடிவு செய்யும்.- தோட்டக்கலை பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), வேளாண் பொறியியல் பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம ), தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்),  தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப் படும் அலுவலர் ஒருவர் மற்றும்  பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி. பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பதற்காகும் மொத்த செலவு, விலையின் உண்மைத் தன்மை, இயந்திரத்தின் செயல்திறன் மற்றும்  ஒட்டுமொத்த பயனளிக்கும்  தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், விருது  மேற்கண்ட குழுவால் முடிவு செய்யப்படும்  பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள், இக்குழுவின் முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்க வேண்டும். கண்டுபிடிப்பாளர்கள் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும்  பதிவு செய்யலாம்.  இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலா மென தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பிச்சிப்பூ விலை இரு மடங்கு உயர்வு

திருநெல்வேலி ,டிச. 2- பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் 4ஆம் தேதி சுபமுகூர்த்த தினம் வருகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை பூக்களின் விலை அதிகரித்துள்ளது.  நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாநகரப் பகுதிகளுக்கு மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கும் வியா பாரிகள் பூக்களை வாங்கிச் செல்வது வழக்கம்.  ஏராளமான வியாபாரிகள் மட்டுமின்றி, பொது மக்களும் பூக்களை வாங்க வந்தனர். ஆனால் வெள்ளிக்கிழமை வழக் கத்தை விட பூக்கள் விலை உயர்ந்திருந்தது. கிலோ ரூ.650-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ வெள்ளிக்கிழமை   ரூ.1,100-க்கு  விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.1,200-க்கு விற்கப் பட்ட மல்லிகைப் பூ  ரூ.1,600-க்கு விற்கப்பட்டது. இதே போல் ஒரு கட்டுகள் கொண்ட ரோஜாப்பூ ரூ.100, கேந்திப் பூ ஒரு கிலோ ரூ.35, சம்பங்கி ரூ.150, வாடாமல்லி ரூ.40, தாமரை ஒன்றுக்கு ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை அதிகரித்து இருந்தாலும் முகூர்த்த நாளை முன்னிட்டு வியாபாரிகளும், பொது மக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதுதொடர்பாக சந்திப்பு பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, வழக்கமாக பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் 4-ந் தேதி முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. எனினும் தேவை அதிகரிப்பால் விலை  ஏற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என தெரிவித்தனர்.  இதேபோல் ஆலங்குளம் பூ மார்க்கெட்டில்  1 கிலோ  பிச்சிப்பூ ரூ.650-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1,250 ஆகவும், 1 கிலோ மல்லிகை பூ ரூ.1,000-க்கு விற்கப்பட்ட நிலை யில் வெள்ளிக்கிழமை அன்று ரூ.1,500 ஆக விற்கப்பட்டது.

சொத்து வரி நிலுவை;  திருமண மண்டபத்துக்கு  குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி. டிச 2- நெல்லையில் சொத்து வரி நிலுவை உள்ளதால் திருமண மண்டபத்துக்கு குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்  நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட வணிக பயன்பாடு கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்பு கள் ஆகியவற்றிற்கு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி, தீவிர வரிவசூல் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் அறிவுரையின்படி, நெல்லை மண்டல 16-வது வார்டு ஆசாத் ரோடு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சொத்து வரி நிலுவைக்காக குடிநீர் இணைப்பு  துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் வடிவேல் முருகன், வருவாய் உதவியாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்கள் அடங்கிய குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கேரளாவில் கொள்ளையடித்த குற்றவாளிகள் கைது   

தென்காசி, டிச. 2 கேரள மாநிலம் சாத்தனூரில் வீட்டின் கதவை உடைத்து பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடித்து விட்டு இரண்டு நபர்கள் தமிழகத்திற்குள் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த னர். அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டதில் பேருந்தில் வந்த   குற்றவாளிகளான சுரேஷ் மற்றும்  எட்வின் ராஜ் ஆகியோரை கைது செய்து கேரள மாநில காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.   

செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கம்  ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைத்த அரசுக்கு பாராட்டு 

மதுரை, டிச.2-  குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி  செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் தனியார் ரிசார்ட்  உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குழு  அமைக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கண்கா ணிப்புக் குழு அமைத்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத் தக்கது என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவி களின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்  கினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி கூறுகையில், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தவு டன் நீர்வீழ்ச்சிகள் மாற்றம் செய்யும் நபர்கள் மீது நட வடிக்கை எடுப்பது குறித்தும் உரியஅனுமதி இல்லா மல் செயல்படும் ரிசார்ட்ஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில்  சுற்றுலாத்துறை இயக்குநர் தலைமையில் நில நிர்வாக ஆணையர், தலைமைக் வன காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துஐந்தே நாளில் குழு அமைத்த அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். அதேசமயம் இயற்கை நீர்வீழ்ச்சி பாதையை நீர் வழிப் பாதையை மாற்றும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ரிசார்ட்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்பது குறித்த அறிக்கையை நாளை மாலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நீர்வரத்து அதிகரிப்பால்  139 அடியை எட்டியது  முல்லைப் பெரியாறு அணை

தேனி, டிச.2-  152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதி மன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படு கிறது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி  வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2015, 2018, 2021 ஆகிய ஆண்டு களில் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை நிலை நிறுத்தப்  பட்டது.  ஜனவரி 10 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை  தண்ணீர் தேக்கும் அளவை நிர்ணயித்து கால அட்டவணை வெளியிடப்பட்டது. நவம்பர் 30 ஆம் தேதியுடன் கால அட்ட வணை முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு  ஜூன் 9 ஆம்தேதி வரை அணையில் 142 அடி தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 139 அடியாக உள்ளது. 1123 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப் படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 66.21 அடியாக உள்ளது. 1112 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் 

தென்காசி ,டிச. 2 தென்காசி மாவட்டம்  ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல கரும்புலியூத்து  பகுதியில் வசித்து வரும் தேவக்குமார் (30) என்பவர் 17 வயது சிறுமியை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலிப்ப தாக கூறி கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் பட்டார். செவ்வாயன்று (29.11.2022) இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி போக்சோ நீதிமன்ற நீதிபதி  குற்றவாளியான  தேவகுமா ருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

பாளை சிறையில் கைதிகளுடன்  உறவினர்கள் பேச ‘இன்டர்காம்’ வசதி

திருநெல்வேலி, டிச. 2- பாளை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதியாக சுமார் 1353-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சிறை யில் இருக்கும் இந்த கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படை யில் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழ மைகளை தவிர 5 நாட்கள்  சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது கைதிகள் ஒரு புறமும், அவர்களது உறவினர்கள், வழக்கறி ஞர்கள் மற்றொரு புறமும் நின்று பேசுவார்கள். அதில் அவர்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால், இருதரப்பினரும் அதிக சத்தத்துடன் பேசுவார்கள். இதனால் சரியாக கேட்க முடிவ தில்லை என்று கைதிகளின் உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.  மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பேசும் நிலை இருந்தது.எனவே கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவி னரின் முகத்தை பார்த்தபடி போனில் பேசும் வகையில் பாளை மத்திய சிறையில் இண்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற் காக கைதிகள் பகுதி மற்றும் உற வினர்கள் பகுதிகளில் தலா 26 இன்டர்காம் இணைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.  மேலும் அவர்களுக்கு இடையே கண்ணாடி அறை போன்று உரு வாக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமிராக் களும் கண்காணிப்புப் பணிக்காக பொருத்தப்பட்டு உள்ளது. இந்த அறையானது வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கலந்து கொண்டு அறையை திறந்து வைத்து, இன்டர்காம் வசதியை தொடங்கி வைத்தார். கூடுதல் சிறை கண்கா ணிப்பாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதன் மூலம் இனி சத்தமாக பேச வேண்டிய தேவை இருக்காது.  கைதிகள் தங்களது உறவினர்க ளிடம் தெளிவாக பேசலாம். தமிழ கத்தில் சென்னை புழல், கோவை, வேலூர், மதுரை மத்திய சிறை களை தொடர்ந்து நெல்லை மத்திய சிறைக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சிபிஎம் 150 கி.மீ நடைபயணம்

தூத்துக்குடி,டிச.2 தூத்துக்குடி மாவட்டத்தில்  டிசம்பர் 3ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற  கோரி மூன்று முனையிலிருந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 150 கிலோமீட்டர் நடை பயணம் துவங்குகிறது.  கோவில்பட்டி, திருவைகுண்டம், திருச் செந்தூர் ஆகிய மூன்று மையங்களில் இருந்து பேரணி துவங்குகிறது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு துவங்கும் நடை பயணத்தை சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே. அர்ஜுனன் துவக்கி வைக்கிறார். அதேபோல் ஸ்ரீவைகுண்டம் அரசு ஊழியர் சங்கம் முன்பு இருந்து துவங்கும் பேரணியை சிபிஎம் மாநில குழு உறுப் பினர் கே.ஜி.பாஸ்கரன் துவக்கி வைக்கிறார். இந்த நடை பயணத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். பொதுக்கூட்டம் திருச்செந்தூர் வஉசி திடலில் இருந்து துவங்கும் பேரணியை சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் துவக்கி வைக்கிறார். டிசம்பர் நான்காம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலா ளர் கே.பி.ஆறுமுகம் தலைமை தாங்கு கிறார். இதில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநில குழு உறுப்பினர் பி.பூமயில் ஆகி யோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  புதிய குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு

தூத்துக்குடி,டிச.2 தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 2 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோ கத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 பஞ்சாயத்துகளை சேர்ந்த 363 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தபடுகிறது. தற்போது இந்த 363 கிராமங்களுக்கும் ஏற்கனவே உள்ள 6 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 6.69 எம்.எல்.டி குடிநீரும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 2.97 எம்.எல்.டி குடிநீரும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை என்பதால் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அகரம் கிராமம் அருகே நீர் உறிஞ்சு கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேசன் அமைத்து 16.57 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், சேதுராமலிங்க புரத்தில் 16.57 எம்.எல்.டி திறன் கொண்ட குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 363 கிராமங்களில் உள்ள 3.05 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். 

 

;