மதுரை, ஜூன் 11- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தும் விலைவாசி உயர்வைக்கட் டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரைவார்க்கக்கூடாது என்று வலி யுறுத்தி மதுரையில் அனைத்து தொழிற்சங் கங்களின் மாவட்ட மாநாடு ஜூன் 11 சனிக்கிழ மையன்று நடைபெற்றது. எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் வி. பாதர் வெள்ளை தலைமை வகித்தார். தொ.மு.ச. பேரவை செயலாளர் மேலூர் வி.அல்போன்ஸ், மாவட்ட கவுன்சில் செய லாளர் சி. கருணாநிதி, ஐஎன்டியுசி மாநில செயல் தலைவர் பி. கதிர்வேல், மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாநில செயல் தலை வர் எம்.சுப்பிரமணியபிள்ளை. எம்எல்எப் மாநில இணைச் செயலாளர் எஸ்.மகபூப் ஜான், ஏஐடியுசி மாநில தலைவர் எஸ். காசிவிஸ்வநாதன், மாவட்டத் தலைவர் எம். நந்தாசிங், தொ.வி.மு., மாநில துணைச் செயலாளர் பெ.சரவணன், டிடிஎஸ்ஆர்எஸ்எப் மாநில செயல் தலை வர் ஏ. செண்பகம், ஏஏஎல்எல்எம் மண்டல பொதுச் செயலாளர் எஸ். சங்கையா, எஸ்டி டியூ மாநில தலைவர் ஜெ. முஹம்மது ஆசாத், மதுரை தெற்கு மாவட்ட தலை வர் கே. சாகுல்அமீது, டிடிஎஸ்எப் மண்டல பொதுச்செயலாளர் எஸ். முருகேசன் ஆகி யோர் பேசினர். சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் வி. குமார் நிறைவுரை யாற்றினார், மாவட்டச் செயலாளர் இரா. லெனின் நன்றி கூறினார் .இதில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.