districts

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப்.14- அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பயிற்சி அர்ச்சகர்களாக நிய மிக்க தடை விதிக்க கோரிய வழக்கில் இரு  தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதி மன்ற மதுரை கிளை தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு இந்த வழக்கு வியாழனன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்க றிஞர் ஏ.ஜி.சண்முக சுந்தரம், ஏ.ஏ.ஜி.வீரா  கதிரவன் ஆஜராகி, ‘‘அர்ச்சகர் பணி அனு பவம் மட்டுமே அரசு உத்தரவு. இது சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பணி அனு பவம் 1 ஆண்டு மட்டுமே. ஆகம வேத பயிற்சி  பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.  இவர்கள் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி மட்டுமே பெறுவார்கள். இதை தான் இவர்  கள் எதிர்த்து வருகின்றனர். மேலும் வழக்கை தாக்கல் செய்த திரி பூர சுந்தரர்கள் பணி இல்லை என கூறுகின்ற னர். இது குறித்த வழக்கை இவர்கள் வேலை  வாய்ப்பு குறித்து விசாரணை செய்ய கூடிய  நீதிமன்றத்தில் தான் வழக்காக தாக்கல் செய்ய முடியும். இந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும் தனிபட்ட முறை யில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து இவர்கள் மனு தாக்கல் செய்தால், அதற்கு  உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறை களை வகுத்துள்ளது. மேலும் இதே போல  கோரிக்கை வைத்த பல்வேறு வழக்கு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. அரசின் உத்தரவில் ஆகம விதிகள் எது வும் மீறவில்லை. அர்ச்சகர்களை நியமனம்  செய்தால் மட்டுமே இவர்கள் வழக்கு தொடரமுடியும். எனவே இந்த வழக்கு விசா ரணைக்கு உகந்தது இல்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர். இதனை தொடர்ந்து மனு தாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘அரசின் உத்தரவில் பல்வேறு விதிமுறை உள்ளது. கோவில் பணத்தை எடுத்து எவ்வாறு சம்பளம் வழங்க முடியும். ஆகம விதிகளின்படி கோவில்களில் பணி நியமனம் வரன் றைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளாமல் இந்த அரசு அறி விப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்