கள்ளக்குறிச்சி, மே 9- 12ஆம் வகுப்பு தேர்வில் ஏ.கே.டி.பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்து வருகின்றனர். மாணவி அபிராமி தமிழ் 97, ஆங்கிலம் 99, கணிதம் 99, இயற்பியல் 98, வேதியியல் 100, உயிரியல் 98 என மொத்தம் 591 மதிப் பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார். மாண வன் புகழ்வர்மன் தமிழ் 96, ஆங்கிலம் 96, கணிதம் 99, இயர்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 99 என மொத்தம் 589 மதிப்பெண் பெற்றார். அமீன், ஷெரீன், புவனேஷ் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் 587 மதிப்பெண் பெற்றனர். 590க்கு மேல் ஒரு மாணவரும், 580க்கு மேல் 21 பேரும், 570க்கு மேல் 39 பேரும், 550க்கு மேல் 78 பேரும், 500க்கு மேல் 216 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 450க்கு மேல் 412 பேரும், 400க்கு மேல் 568 பேரும், 350க்கு மேல் 674 பேரும், 300க்கு மேல் 732 பேரும் மதிப்பெண் பெற்றுள் ளனர். கணிதம் பாடத்தில் 9 பேரும், இயற்பி யல் 6 பேரும், வேதியியல் 30 பேரும், உயிரி யல் 5 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 5 பேரும், வணிகவியல் ஒருவர், கணக்குப் பதிவியல் 3 பேர் என மொத்தம் 60 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத் துள்ளனர். பள்ளியின் தாளாளர் மகேந்திரன், செய லாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட்ராமணன் ஆகியோர் ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்க ளையும், பாராட்டுதல்களையும் தெரி வித்தனர்.