இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி 13வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.ரவிக்குமார் வியாழனன்று தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திமுக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் முத்து விஜயன், முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் முருகன், கே.முனியசாமி, பொன்னுச்சாமி, வீரையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.