districts

img

தேசிய திறனாய்வுத் தேர்வு: பரமானந்தா பள்ளி மாணவர் 5 பேர் தேர்ச்சி

தென்காசி , ஜூலை 1  ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி களுக்கு  தேசிய திறனாய்வு  தேர்வு  நடைபெற்று  வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஆண்டு தோறும் ரூ.12000வீதம், 4 ஆண்டுகளு க்கு ரூ.48000  மத்திய அரசால் மாணவ, மாணவியரின்  வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டும்.  இத்தேர்வில்  தென்காசி  மாவட்டம்  புளியங்குடி பரமானந்தா  நடுநிலைப் பள்ளி யைச் சேர்ந்த மாணவ மாணவிகள் முறையே  பாலமுருகன், கார்த்தி, சந்தன மாரி,  சங்கீதா,  இராமலெட்சுமி. ஆகியோர்  தேர்ச்சி  பெற்றுள் ளனர். இவர்களை  பள்ளி  நிர்வாகி  எபநேசர் கமலம், செயலர் ஞானப்பிரகாசம்,தலைமை ஆசிரியை  செல்வ சுகுணா மற்றும் ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர் கள்  இராமச்சந்திரன்,  மாரியப்பன்,  மாவட்ட க்கல்வி அலு வலர் பொறுப்பு  ஜெயப்பிரகாஷ்  ஆகியோர்  பாராட்டினர். தொடர்ந்து  பலஆண்டுகளாக பரமானந்தா  நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது.

;