districts

மதுரை முக்கிய செய்திகள்

கந்துவட்டி கொடுமையால்  ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த  4 பேர் தற்கொலை முயற்சி  உத்தமபாளையம் அருகே 2 பெண்கள் கைது

தேனி, ஜூன் 3- உத்தமபாளையம் அருகே கந்துவட்டி கொடுமை கார ணமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி எஸ்டிகே நகரைச் சேர்ந்தவர் பிச்சைமணி .இவரது மனைவி கலைவாணி .இவர்களுக்கு விமலா (16),சுகாஷிணி (14) ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .இவர்கள் வீட்டின் அருகே உள்ள பாலமுருகன் மனைவி  வித்யாவிடம் ரூ 50 ஆயிரம் ,பிரகாஷ் மனைவி தீபாவிடம்  ரூ 1,10,000 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது.  10 ஆயிரத்திற்கு வாரம் 1000 வட்டி செலுத்தி வந்துள்ளார்.  கலைவாணி தற்போது வட்டி கொடுக்க கால தாமதம் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர் .கடந்த 1 ஆம் தேதி போனில் தகாத வார்த்தையால் பேசி யுள்ளதாக கூறப்படுகிறது .இதனால் மனமுடைந்த நால்வ ரும் வெள்ளிக்கிழமை மாலை எலி மருந்தை கலக்கி  குடித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்  மூலம் அவர்களை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உத்தமபாளையம் காவல்துறையினர் கலைவாணி யிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து பால முருகன் மனைவி வித்யா, பிரகாஷ் மனைவி தீபா ஆகி யோரை கைது செய்தனர்.

காலமானார்

இராமநாதபுரம், ஜூன் 3- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்  கிராமத்தைச் சேர்ந்த சி. கருப்பையா என்பவர் வியாழக்  கிழமை அன்று காலமானார். இவர், சிபிஎம் முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் வி.  முருகனின் மாமனாரும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வசந்த் சுர்ஜித்தின் தாத்தாவும் ஆவார்.  அன்னாரது மறைவுச்செய்தி அறிந்தது சிபிஎம் மாவட்ட செயலாளர் வி .காசிநாத துரை. மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல், இ. கண்ணகி, தாலுகா செயலாளர்கள் செல்வராஜ் எஸ்.  போஸ் மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர்.

திருமணமான புதுப்பெண் தற்கொலை

சின்னாளப்பட்டி, ஜூன் 3- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னா ளப்பட்டி வி.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் தினேஷ் ( 26).  இவர் மதுரையில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனி யில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாரதி கனி (22).இவர்களுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு  முன்பு தான் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பாரதிகனி சனிக்கிழமையன்று வீட்டில் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். பாரதி கனியின் தாயார்  பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில் சின்னாளப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலூர் அருகே  மது அருந்தியவர் பலி

மதுரை, ஜூன் 3-  மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியைச்  சேர்ந்தவர் பனையன் (45).இவர் தனது உறவினர்களான கருவா மொண்டி மற்றும் வீரணன் ஆகியோருடன் அப்பகு தியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி னார். கடை அருகே பெரியாறு பாசன கால்வாய் பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் பனையன் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கமான நிலையில், அருகில் இருந்தவர்கள் உதவி யுடன் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த னர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரி ழந்தார்.  அவருடன் மது அருந்திய கருவாமொண்டி, வீரணன் ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் தென்மண்டல காவல்  துறை தலைவர் பொன்னி. மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். அப்பகுதியில் கிடந்த  திராவக பாட்டிலில் தண்ணீரை கலந்து அருந்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை வீச வேண்டாம்  

பயணிகளுக்கு ரயில்வே மேலாளர் வேண்டுகோள்

மதுரை, ஜூன் 3-  ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலைய வளாகங்க ளில் ரயில் பயணிகள் குப்பைகளை வீச வேண்டாம் என்றும்  ரயில்வே வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சி யில் பயணிகள் ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறு கோட்ட  ரயில்வே மேலாளர் பி.அனந்த் வேண்டுகோள் விடுத்தார்.  உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு  அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் களில் இருந்து கழிவுகளை யார்டில் வீசுவதைத் தவிர்ப்ப தில் பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம். ரயில் நிலை யங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுவதில் காட்டும் விழிப்புணர்வா கும். குப்பைத்தொட்டிகளில் கழிவுகளை இடுவது ரயில்  நிலையத்தின் தூய்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், அத்தகைய கழிவுகளை எளிதில் பிரித்து அகற்றுவ தற்கும் வழி வகுத்து, அதன் மூலம் துப்புரவு ஊழியர்களின் பணியை எளிதாக்கவும் செய்கிறது. காகிதக் தட்டுகள் மற்றும் உணவுக் கழிவுகள் ரயில்களி லிருந்து வெளியே எறியப்படுவதை காணலாம், இதன் கார ணமாக ரயில் நிலையங்கள் மற்றும் யார்டுகள் அழுக்காக வும், அசுத்தமாகவும் மாறுகிறது. பிளாஸ்டிக் மற்றும் உலோ கப் பொருட்கள் ரயில் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அதிக நுண்திறன் சிக்னல் இன்டர்லாக் சிஸ்டத்துடன் குறுக்கீடு கொண்டு , சிக்னல் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையைப் பாதிக்கலாம். ரயில் பயணத்தில் உருவாகும் கழிவுகளை முறையாக  வெளியேற்றுவது சிறந்த சுற்றுச்சூழலுக்கும் குறிப்பாக ரயில்வே அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கும் உத வும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செம்பட்டி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி

சின்னாளப்பட்டி, ஜூன் 3- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த இராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபில் கண்ணன் ( 23). கல்லூரி மாணவர். இதே ஊரை சேர்ந்தவர் கோபி (23),  இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை  பார்த்து வருகின்றார். கோயில் திருவிழாவிற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இரு சக்கர வாகனத்தில் சொந்த வேலை யாக சென்று விட்டு இராமநாதபுரத்திற்கு வந்து கொண்டி ருந்தனர். உசிலம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி  சென்ற வேன் ,இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இரு வரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .அங்கு சிகிச்சை  பலனின்றி கபில் கண்ணன், கோபி இருவரும் உயிரிழந்த னர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர்.

தேனியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது 

தேனி, ஜூன் 3- கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (28). இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டிக்கு வந்துள்ளார். பின்னர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்த ரூபன்(21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார். இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து ரூபனை கைது செய்தனர்.  இதேபோல் புலிக்குத்தியை சேர்ந்தவர் முருகன்(52).  கவரிங் நகை விற்பனை செய்யும் தொழில் செய்துவரு கிறார். கூடலூர் அண்ணாநகர் பொதுக்கழிப்பிடம் அருகே  நடந்து சென்றபோது அருண்(21), சிராஜ்(24), பிரபா கரன் ஆகியோர் அவரை மிரட்டி பணத்தை பறித்து சென்ற னர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து அருண், சிராஜை கைது செய்தனர். தப்பிஓடிய பிரபாகரனை தேடி வருகின்றனர்.



 

;