திண்டுக்கல், நவ.9- திண்டுக்கல் மாவட்ட சிறப்பு சுருக்க திருத்தம் 2023 வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத் துக்கட்சியினர் முன்னிலை யில் திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் புதனன்று வெளி யிட்டார். மாவட்ட அளவில் மொத்த வாக்காளர்கள் 18 லட்சத்து 67 ஆயிரம் பேர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதி கம் உள்ளனர். இந்த பட்டியலின்படி திண் டுக்கல் சட்டமன்ற தொகுதி யில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 850 வாக்காளர்களும், பழனி தொகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 313 வாக்காளர்களும், ஆத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 736 ஒட்டன்சத்தி ரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 242, நிலக் கோட்டை தொகுதியில் 2 லட் சத்து 46 ஆயிரத்து 405, நத்தம் தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 508, வேடசந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 779 பேர் என மாவட்ட அளவில் 18 லட்சத்து 67 ஆயி ரத்து 833 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 08 ஆயிரத்து 818 பேர், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 58 ஆயிரத்து 815 பேர் ஆகும். எல்லா சட்டமன்ற தொகுதி யிலும் ஆண் வாக்காளர் களை விட பெண் வாக்காளர் களே அதிகம். இந்நிகழ்ச்சி யில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆஸாத், அதி முக சார்பாக வழக்கறிஞர் ஜெயபால், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(நநி)